‘ஜனநாயகன்’: விஜய்யின் எம்ஜிஆர் பாணி போஸ்டரும் பின்னணியும்!

தீவிர அரசியலில் குதித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் நடித்து வரும் கடைசிப்படத்துக்கு ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்த நிலையில், அவரது கடைசி படமாக கருதப்பட்ட ‘தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், செகன்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் இரண்டாவது லுக்கில் விஜய், சிரித்தவாறே சாட்டையை சுழற்றியபடி போஸ் கொடுத்துள்ளார்.

சிவப்பு நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த போஸ்டரில், கைகளில் சாட்டையை சுழற்றிய படி விஜய் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, ‘நான் ஆணையிட்டால்’ என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் போஸ்டரில் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1965-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பான கடைசிப் படம் என்பதால், இதில் கண்டிப்பாக அரசியல் கருத்துகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ‘ஜனநாயகன்’ என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.

மேலும், போஸ்டரில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ள சிவப்பு நிறம், புரட்சியை குறிக்கிறது என நெட்டிசன்கள் டீகோட் செய்துள்ளனர். மேலும், சினிமாவில் இருந்து அரசியலில் கால் பதித்து அதில் வெற்றிகரமாக முதலமைச்சர் பதவிக்கு உயர்ந்த எம்.ஜி.ஆரின் ரெஃபரன்ஸ்கள் அனைத்தும், விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு அடியெடுத்து வைக்கும் வகையில் அமைந்துள்ளன

மொத்தத்தில் இத்திரைப்படம், 2026 சட்டமன்ற தேர்தலின்போது விஜய்யை மக்களிடையே ஒரு செல்வாக்குமிக்க தலைவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе. waschmittel direkt in die trommel : wie sinnvoll ist das ?.