TNPSC-யில் 615 காலி பணியிடங்கள்… விண்ணப்பிப்பது எப்படி?

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு) 2025-ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

TNPSC வெளியிட்ட அறிக்கையின்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் உதவிப் பொறியாளர் (அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 47 வகையான பதவிகளுக்கு 615 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு, நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. தேர்வுக்கான அறிவிக்கை, TNPSC-யின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி, மே 21 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் 27.05.2025 முதல் 25.06.2025 வரை இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம், மேலும் தேர்வுக் கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்த முடியும்.

தேர்வு தேதி

கணினி வழித் தேர்வு 04.08.2025 முதல் 10.08.2025 வரை நடைபெறும்.

தொடர்ச்சியாக 11 ஆவது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024 ஆம் ஆண்டு அறிவிக்கையில், இரண்டு நிதியாண்டுகளுக்கான 1236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) மூலம், ஒரு நிதியாண்டிற்கு (2025-2026) 615 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்”என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Appartement duplex pour 12 personnes, val thorens. ?். Mets vs red sox predictions, odds, line, start time, 2025 mlb.