நடிகர் விஜய் நடிப்புக்கு முழுக்கு… கட்சி பெயர் அறிவிப்பு… பரபரப்பாகும் தமிழக அரசியல்!

ரசியல் கட்சி தொடங்குவது குறித்து நீண்ட நாட்களாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நடிகர் விஜய், தற்போது தனது கட்சி பெயரை ‘தமிழக வெற்றி கழகம்’ என்று அறிவித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கூடவே அவர், இனி திரைப்படங்களில் நடிக்கவும் போவதில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தின் மூலம் கடந்த பல ஆண்டுகளாகவே பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாகவே அவர் இத்தகைய நடவடிக்கைகளில் தனது ரசிகர்களை ஈடுபடுத்தி, அவர்களைத் தயார்படுத்தி வருவதாக பேசப்பட்டு வந்தது. கடந்த காலங்களில் நடைபெற்ற ஊராட்சித் தேர்தல்களில் கணிசமான இடங்களில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, சில இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டவர்களுடன் சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள பனையூரில், விஜய் கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக வருவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், கட்சியின் பெயர் உள்ளிட்டவைகள் முடிவு செய்யப்பட்டு, கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ எனப் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்த அறிவிப்பை விஜய் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், விஜய் புதிய கட்சி தொடங்கி உள்ளது குறித்த அறிவிப்பு தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கில, இந்தி சேனல்களும் கூட இது குறித்த செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், X தளத்தில் ‘#தமிழகவெற்றிகழகம்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நடிப்புக்கு முழுக்கு

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள விஜய், அதற்கு முன்னதாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கும் திட்டத்தில் உள்ளார். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Goat’ விஜய் நடித்து வருகிறார். இதை முடித்துவிட்டு அவர் அரசியலில் முழு மூச்சுடன் இறங்க உள்ளார்.

விஜய் அறிக்கை

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால், அவர் இனி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்பது முடிவாகி விட்டது.

விஜய் கட்சியால் எந்தெந்த கட்சிகளுக்கு பாதிப்பு?

இந்த நிலையில், விஜய் தொடங்கி உள்ள கட்சியினால் தமிழகத்தில் எந்த கட்சிக்கு பாதிப்பு என்பது குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது, குறிப்பாக பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளின் வாக்குகள் விஜய் கட்சிக்கு ஆதரவாக திரும்பலாம் என்பது போன்ற விவாதங்களும் பரபரப்பாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கூடவே, நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்பது என்பது எம்ஜிஆருடன் முடிந்துவிட்டது என்றும், டி.ராஜேந்தர், பாக்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், , சிரஞ்சீவி, கமல் போன்றவர்களின் நிலைமைதான் அவருக்கும் ஏற்படும் என்றும், அதனால் தான் ரஜினிகாந்த் சுதாரித்து கட்சி ஆரம்பிக்காமல் தப்பித்துவிட்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இன்னொரு தரப்பினர், விஜய் கட்சியின் கொள்கைகள் என்ன, அவர் யாரை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறார் என்பதே பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர்.

இதனிடையே புதிய கட்சி தொடங்கி உள்ள விஜய்க்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தம், இனிவரும் நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Meinerding's marvel studios variant covers will grace marvel comics titles throughout september, heralding the arrival of. Thei | technological and higher education institute of hong kong chai wan campus. Advantages of overseas domestic helper.