‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்!

ண்டு தோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சிறந்த இதழியலாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்கள் கீழ்க்காணும் தகுதியைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்:

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்திருக்க வேண்டும்.

த்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.

தழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இத்தகைய தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பதாரர்களில் ஒருவரே, விருதாளராக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். குழுவின் முடிவே இறுதியானது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், உரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு 30.04.2024 க்குள்ளாக அனுப்பி வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

注册. But іѕ іt juѕt an асt ?. ?ு.