வைர­முத்துவுக்கு ‘பெருந்தமிழ் விருது’… ஞான பீடம் விருது குறித்து ஆதங்கம்!

விப்­பே­ர­ரசு வைர­முத்து எழு­திய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூலுக்கு  ‘பெருந்­த­மிழ் விருது’ வழங்கப்படுகிறது. மலே­சிய நாட்­டின் தமிழ் இலக்­கி­யக் காப்­ப­க­மும் தமிழ்ப்­பே­ரா­ய­மும் இணைந்து இவ்­வி­ருதை வழங்­கு­கின்­றன.

முப்­பது மாத நீண்ட ஆய்­வுக்­குப் பிறகு  வைர­முத்து எழு­திய இந்த ‘மகா கவிதை’ நூலை, கடந்த  ஜன­வரி 1ஆம் தேதியன்று  முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்­ட நிலையில், இந்த நூல் பரவலான கவனம் பெற்றது. 

நிலம், – நீர், – தீ,- வளி, – வெளி என்ற ஐம்­பூ­தங்­க­ளின் பிறப்பு – இருப்பு – சிறப்பு குறித்து,  விஞ்­ஞான ரீதி­யில் எழு­தப்­பட்ட பெருங்­க­விதை நூல் ‘மகா கவிதை’. 

இந்த நிலையில், இது சிறந்த தமிழ் நூலுக்­கான ‘பெருந்­த­மிழ் விருது’ பெறு­வதாக  மலே­சிய இந்­தி­யக் காங்­கி­ர­ஸின் தேசி­யத் துணைத் தலை­வ­ரும், முன்­னாள் அமைச்­ச­ரும், இந்­நாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டத்­தோஸ்ரீ எம்.சர­வ­ணன் சென்­னை­யில் ­அ­றி­வித்­தார்.

மலே­சி­யப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கல்­வி­யா­ளர்­க­ளும், தேர்ந்த திற­னாய்­வா­ளர்­களும் அடங்கிய 12 பேர் குழு,  பெருந்­த­மிழ் விரு­துக்கு மகா கவி­தை­யைத் தேர்ந்­தெ­டுத்­தி­ருக்­கி­றது.  

வருகிற மார்ச் 8 ஆம் தேதி, மலே­சி­யத் தலை­ந­க­ரான கோலா­லம்­பூ­ரில் புகழ்­பெற்ற உலக வர்த்­தக மையத்­தில்,‘மகா கவிதை’ நூலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்கப்பட உள்ளது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும், தமிழ்பேராயமும் இணைந்து இந்த விருதை வழங்குகிறது.

இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, “விருது சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். 90 வயது வரை யாரும் காத்திருக்க வயது இல்லை, பொறுமையும் இல்லை, விருது வழங்கும் நிறுவனத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை இல்லை, எனது ஆதங்கம். தமிழகத்தில் உள்ள பல நூல்களில், மகா கவிதை நூல் விருது பெற்றது தமிழ் இட்ட கட்டளை என்று நான் கருதுகிறேன்.

இந்திய புத்தகத்திற்கு மலேசியா விருது வழங்க உள்ளது. ஆனால் இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் விருது, தமிழ் மொழிக்கு எத்தனை முறை ஞான பீடம் விருது வழங்கியுள்ளது? இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் இதுவரை 58 விருதுகள் வழங்கியுள்ளது.

இந்தி மொழிக்கு 11 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாளம், வங்காளம் மொழிக்கு 6, உருது மொழிக்கு 5 முறை. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு 2 முறை மட்டுமே அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே விருது கொடுத்துள்ளது ஞான பீடம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

‘ஞான பீடம்’ விருது குறித்து வைரமுத்து நீண்ட நாட்களாகவே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். விகடனில் தொடராக வந்த அவரின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’  நூலுக்கு 2003-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தபோதிலும், அப்போதே அவர் அதற்கு ஞானபீட விருதை எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தற்போதும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரது ஆதங்கம் உரியவர்களை எட்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. Raven revealed on the masked singer tv grapevine. 자동차 생활 이야기.