19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… மஞ்சள் எச்சரிக்கை!

மிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து, வெயில் வாட்டி வதைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 29 ஆம் தேதியில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

30 மற்றும் அக்டோர் 2 ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், கேரளா, மாஹே, உள் மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

gocek yacht charter. Each of these blue cruise routes offers something different and special. Аренда парусной яхты в Фетхие.