10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியீடு!

மிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக உள்ளன. முன்னதாக, பிளஸ்-2 (12 ஆம் வகுப்பு) தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே, அதாவது மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுமார் 8.75 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, மே 19 ஆம் தேதி (திங்கட்கிழமை) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது மூன்று நாட்கள் முன்கூட்டியே, அதாவது மே 16 ஆம் தேதி காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளும், காலை 11 மணிக்கு 11 ஆம் வகுப்பு முடிவுகளும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் அடிப்படையில், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மாணவர்களின் கல்வி வாழ்க்கையில் முக்கியமான தருணமாகும். இந்த முடிவுகள், அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகின்றன.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை ஆன்லைனில், அரசு தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பார்வையிடலாம். பள்ளிகளிலும் முடிவுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவற்றில் ஏதாவது ஒரு முறை மூலம் மாணவர்கள், தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Classroom assessment archives brilliant hub. nj transit contingency service plan for possible rail stoppage. An american goldfinch perches on a feeder.