உலகளாவிய AI மையமாக உருவெடுக்கும் அபுதாபி… கைகோர்த்த ஓபன் AI

சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் AI, உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் அமைக்க உள்ளது. இதற்காக, ஓபன் AI-யின் மிகச்சக்திவாய்ந்த AI உள்கட்டமைப்பு தளமான ஸ்டார்கேட் (Stargate) முதன்முறையாக அபுதாபியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஸ்டார்கேட்( Stargate):உலகளாவிய AI சக்தி மையம்

‘ஸ்டார்கேட்’ என்பது வெறுமனே ஒரு தரவு மையம் அல்ல; இது எதிர்கால செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு துணிச்சலான கண்ணோட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். ஓபன் AI மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான G42 இடையேயான இந்த கூட்டு முயற்சி, அபுதாபியில் 1 கிகாவாட் AI கணினி கிளஸ்டரை (AI computing cluster) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். இதன் முதல் கட்டமாக, 2026 ஆம் ஆண்டிலிருந்து 200 மெகாவாட் AI கணினி திறன் இயங்கத் தொடங்கும்.

ஓபன் AI நிறுவனத்தின் கூற்றுப்படி, ‘ஸ்டார்கேட்’ ஒரு புதிய நிறுவனமாகும். இது, அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் AI உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் தொடங்கப்பட்டாலும், அபுதாபி இதன் சர்வதேச அறிமுகத்திற்கு மையமாக இருக்கும்.

உலகளாவிய கூட்டு முயற்சி

இந்த மாபெரும் திட்டம், பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் உலகளாவிய நன்மை பயக்கும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AGI) உருவாக்குவதற்கு “முன்னணி அளவிலான கணினி திறனை” (frontier-scale compute capacity)உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் ஆரக்கிள், NVIDIA, சிஸ்கோ மற்றும் சாஃப்ட்பேங்க் ஆகிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பங்கேற்பதன் மூலம், இதன் முக்கியத்துவம் என்ன என்பது வெளிப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE):முதல் சாட்ஜிபிடி-இயக்க நாடு

இந்த கூட்டு முயற்சியின் மூலம், UAE உலகின் முதல் நாடாக சாட்ஜிபிடியை நாடு முழுவதும் அணுக வழிவகுக்கும். இதனால், ஒவ்வொரு குடிமகனும், குடியிருப்பாளரும் ஓபன் AI-யின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கல்வி, வணிகம், ஆளுகை உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

உலகளாவிய AI மையமாக தங்கள் நாடு மாற வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையையும் திட்டத்தையும் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டிருக்கும் நிலையில், இந்த முயற்சி அதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக, இந்த திட்டத்தை கருத்தில்கொண்டே இந்த ஆண்டு தொடக்கத்தில், UAE அமெரிக்காவில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உறுதியளித்தது. இது அமெரிக்காவின் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மற்றும் தொழில்நுட்ப மேலாண்மையை உறுதிப்படுத்த உதவும்.

AI இராஜதந்திரத்தில் ( AI Diplomacy) புதிய அத்தியாயம்

இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு பயணத்தைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின் போது தான், ஸ்டார்கேட் UAE உள்ளிட்ட பல AI தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது ஒரு, ‘தொழில்நுட்ப மைல்கல்’ (technological milestone) மட்டுமல்ல, இராஜதந்திர முக்கியத்துவமும் கொண்டது.

இந்த நிலையில், ஓபன் AI, இந்த முயற்சியுடன் நிற்காமல், மற்ற நாடுகளுடன் இதேபோன்ற ‘ஸ்டார்கேட்’ திட்டங்களை ஆராய்ந்து வருகிறது. இந்தியாவின் AI பயணங்கள் மற்றும் பயன்பாட்டு மேம்பாட்டு முயற்சிகளுக்கும் ஓபன் AI ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் அபுதாபியில் உருவாகும் ‘ஸ்டார்கேட்’ தரவு மையம், ஒரு வழக்கமான தரவு மையத்தை விட பெரியது. இது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான செயல்பாடுகளில், எதிர்காலத்தில் நாடுகள் முன்னேறுவதற்கான ஒரு அடையாளமாகும். ஓபன் AI-க்கு, இது உலகளாவிய AGI உள்கட்டமைப்பை விரிவாக்குவதற்கு ஒரு தைரியமான நடவடிக்கையாகவும், UAE-க்கு, இது உலகளாவிய AI தலைமையை நோக்கிய ஒரு பாய்ச்சலாகவும் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mets vs red sox predictions, odds, line, start time, 2025 mlb. By focusing on scripture and prayer, christian preppers find. Interests around the world,” he said.