உலகின் 10 பழமையான நாடுகள்: இந்தியா எத்தனையாவது இடம்?

உலகம் எப்போது தோன்றியது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனால், பண்டைய நாகரிகங்கள் மனித வாழ்க்கையை உருவாக்கி, பல நாடுகளைத் தோற்றுவித்தன.
தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், உலகின் மிகப் பழமையான 10 நாடுகளின் பட்டியல் இதோ:
- ஈரான் (கிமு 3200)
பெர்சியா என அழைக்கப்பட்ட ஈரான், 7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. பல பேரரசுகளைக் கண்ட நாடு. - எகிப்து (கிமு 3150)
பிரமிடுகள், நைல் நதிக்கரை நாகரிகம் என எகிப்து பழமையான நாகரிகத்தின் அடையாளம். 5000 ஆண்டுகளுக்கு முந்தைய நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. - சிரியா (கிமு 3000)
எப்லா நகரம் மூலம் புகழ்பெற்ற சிரியாவில் 7 லட்சம் ஆண்டுகள் பழைய எச்சங்கள் உள்ளன. - வியட்நாம் (கிமு 2879)
விவசாய சமூகங்களின் தொடக்கமாக வியட்நாம், உலகின் முதல் விவசாய நாடுகளில் ஒன்று. - அர்மீனியா (கிமு 2492)
கிறிஸ்தவத்தை முதலில் அரசு மதமாக ஏற்ற நாடு. பழமையான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. - வடகொரியா (கிமு 2333)
கோரியோ இராச்சியத்துடன் 5000 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது. - சீனா (கிமு 2070)
ஷாங் வம்சத்தில் தொடங்கி, இன்று வரை உலகில் முக்கிய இடம் வகிக்கும் நாடு. - இந்தியா (கிமு 2000)
இந்தியா உலகின் எட்டாவது பழமையான நாடு. சிந்து சமவெளி நாகரிகம் மெசொபொடாமியாவுடன் வர்த்தகம் செய்தது. பண்பாடு, மொழி, சமயத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் செழித்த நாடு. - ஜார்ஜியா (கிமு 1300)
8000 ஆண்டுகள் பழைய ஒயின் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உலகின் முதல் ஒயின் நாடாக அறியப்படுகிறது. - சூடான் (கிமு 1070)
3000 ஆண்டுகளுக்கு மேல் வேட்டை, மீன்பிடித்தல், விவசாயம் மூலம் வளர்ந்த நாடு.
இந்தியாவின் இடம்:
இந்தியா இப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் முதல் இன்று வரை, இந்தியாவின் கலாச்சாரமும் பாரம்பரியமும் உலகில் தனித்துவமானவை. 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் மனிதர்கள் வாழ்ந்த இந்தியா, பழமையான நாகரிகங்களில் ஒன்றாகப் பெருமை கொள்கிறது.