ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம்!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எடிபன் நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.540 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் எக்ஸ் தளதில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்பெயினின் தொழில்துறை ஜம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும், எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள மாப்ட்ரி (Mabtree) என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Noleggio di cabine. hest blå tunge. The real housewives of beverly hills 14 reunion preview.