நகரமயமாக்கலில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு… இந்திய அளவில் மற்றுமொரு சாதனை!

ந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 1991 ஆம் ஆண்டு 25.71 சதவீதம் என இருந்தது. 2011 ஆம் ஆண்டு, இது 31.16 சதவீதம் ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் நகர்ப்புற மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டில் 48.45 சதவீதம் என உயர்ந்து, இந்திய சராசரியைவிட ஏறத்தாழ 17.29 சதவீதம் அதிகரித்து, நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்ந்தது. ​இதன் விளைவாக, ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சியாகவும் வளர்ச்சி பெறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில், நகர்ப்புற வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

அந்த வகையில், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வசதிகளைப் பெருக்குவதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்’ புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்

​நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்திலும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகளிலும், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் செயல்பட்டுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2,04,860 பேர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

சீர்மிகு நகரத் திட்டம்

மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கான உட்கட்டமைப்பு, சுத்தமான மற்றும் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சீர்மிகு தீர்வுகள் வழங்குதல் போன்ற நோக்கங்களுடன் சீர்மிகு நகரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ.5500 கோடி ஒன்றிய அரசின் பங்களிப்பு ரூ.5390 கோடி மொத்தம் ரூ.10,890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

சாலை மேம்பாட்டுத் திட்டம்

19.10.2022 அன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், “649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 55,567 கி.மீ. சாலைகளில், குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் ஆகியவற்றால் பழுதடைந்த சாலைகள் மற்றும் 2016-17 ஆம் ஆண்டுக்கு முன்பு போடப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள 20,990 கி.மீ. நீளமுள்ள சாலைகள் சீரமைக்கப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, 20 மாநகராட்சிகள் (பெருநகர சென்னை மாநகராட்சி தவிர மற்றும் 138 நகராட்சிகளில் சுமார் 11,872 கி.மீ நீளமுள்ள சேதமடைந்த சாலைகளை நான்கு ஆண்டுகளில் சீரமைக்க உத்தரவிடப்பட்டு; சேதடைந்த சாலைகளில் 9,346 கி.மீ. சாலைகள் நடப்புத் திட்டங்களின் கீழ் (TURIF, KNMT, SFC மற்றும் 15வது CFC நிதி) சீரமைக்கவும் மீதமுள்ள 2,526 கி.மீ நீளமுள்ள சேதமடைந்த சாலைகள் அரசின் சிறப்பு நிதி ரூ.1,000 கோடியில் 2022-2023 முதல் 2025-2026 வரை நான்கு ஆண்டுகளில் பணி முடிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நகர்ப்புற நலிந்தோர் நலன், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியாளர் நியமனங்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நகரமயமாக்கலில் முன்னணி மாநிலம்

இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக, தூய்மை கணக்கெடுப்பு மாநில தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 22 ஆவது இடத்தில் இருந்து தற்போது 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியலில் 10 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

மேலும் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தரவரிசையில் திருச்சி மாநகராட்சி மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. ஒரு லட்சத்திற்கு குறைவான நகரங்களின் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் மறைமலைநகர் நகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. தெற்கு மண்டலத்தை சார்ந்த மாநிலங்களின் உள்ள நகரங்களில் 15,000க்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தரவரிசை பட்டியலில் கீழ்வேலூர் பேரூராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில், புதுமையான திட்டங்களினால் பல்வேறு பெருமைகளைப் பெற்று நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pemerintah kota batam ajak masyarakat terapkan hidup sehat. Short story – kashish’s journey through ramayana. I have еnjоуеd good hеаlth аnd lіvеd tо ѕее mаnу ѕосіеtаl drеаmѕ rеаlіѕеd.