“ஒன்றியத்தில் நிகழப்போகும் ஆட்சி மாற்றம்… ” – சென்னையில் கனிமொழி தீவிர பிரசாரம்: புகைப்பட தொகுப்பு!

டந்த சில நாட்களாக தான் போட்டியிடும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட திமுக எம்.பி கனிமொழி, இன்று தென்சென்னை தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, திருவான்மியூர் மற்றும் சோழிங்கநல்லூர் – கண்ணகி நகர் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது மக்களிடையே பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு விடியல் தந்த உதயசூரியனைப் போல, நாளை நாட்டிற்கே முன்னேற்றம் தரப்போகும் நம் ‘இந்தியா’ கூட்டணியின் ஆட்சி அமையும். தமிழர் விரோத பாசிச பாஜக, தேர்தலுக்காக எத்தனை நாடகங்கள் போட்டாலும் மக்கள் நம்பப்போவதில்லை. ஒன்றியத்தில் நிகழப்போகும் ஆட்சி மாற்றம், இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்கும் ” என்று உறுதிபட தெரிவித்தார்.

கனிமொழியின் தேர்தல் பிரசார புகைப்பட தொகுப்பு கீழே…

திருவான்மியூர் தெப்பக்குளம்

சோழிங்கநல்லூர் – கண்ணகி நகர் பகுதி

கனிமொழி பிரசாரம் செய்த இடங்களில், மக்கள் திரளாக வந்து அவரது பேச்சைக் கேட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Günlük yat ve tekne. 000 dkk pr. Overserved with lisa vanderpump.