இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ ( Zomato ) நிறுவனம், சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.
சொமேட்டோவின் தாய் நிறுவனமான ‘ஒன் 97 கம்யூனிகேஷன் லிமிடெட் ‘நிறுவனம், பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தை செயலியான பேடிஎம் (Paytm) ல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை 2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து, வரும் செப்டெம்பர் 30 ஆம் தேதி முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சொமேட்டோ இந்த Paytm டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ‘ஒன் 97 கம்யூனிகேஷன்’ தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டு முதல் BookMyShow வின் நெருங்கிய போட்டியாளராக இருந்து வரும் Paytm, திரைப்பட டிக்கெட்டுகளை விற்கும் அதன் ‘ticketnew’ தளத்தையும், நேரலை நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை கையாளும் அதன் ‘Insider’ தளத்தையும் விற்பதன் மூலம் அதன் சந்தைப் பங்கை Zomato நிறுவனத்திடம் ஒப்படைக்கிறது.
இந்த கையகப்படுத்தல் மூலம் Zomato வின் பிரதான தொழில் பிரிவுகளின் கீழ் வராத வணிகங்களின் மொத்த மதிப்பை அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் மேலாக உயர்த்த முடியும் என்று தனது பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
Zomato வின் உணவக டேபிள் புக்கிங் சேவைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்கும் events தொழில் மற்றும் டிக்கெட் வழங்கும் பிரிவு ஆகியவற்றின் முக்கிய வணிகங்கள், அதன் கடந்த ஆண்டு மொத்த வருவாயில் வெறும் 2 சதவீதம் மட்டுமே. என்றாலும், இவை Zomato வின் வேகமாக வளர்ந்து வரும் தொழில் பிரிவுகளாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.