குழந்தைகளைத் தாக்கும் ‘வாக்கிங் நிமோனியா’… அறிகுறிகள் என்ன?

குளிர் காலங்களில் குழந்தைகளை மிக அதிகம் தாக்கும் ‘வாக்கிங் நிமோனியா’ தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படுவதால், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

‘வாக்கிங் நிமோனியா’ என்றால் என்ன?

‘வாக்கிங் நிமோனியா’ என்பது ஒரு வகை நுரையீரல் தொற்று ஆகும். இது நிமோனியாவின் லேசான வடிவமாகும். இது சிலருக்கு உயிருக்கு ஆபத்தைக் கூட விளைவிக்கலாம். சீதோஷ்ண நிலை, பருவ மாற்றங்கள் காரணமாக இந்த தொற்று ஏற்படுகிறது. தற்போது குளிர்காலமாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட வயது குழந்தைகளிடம் விரைவில் தொற்றி, வேகமாக பரவி வருகிறது. இது மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மார்பு சளி ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் அரிதாகவே தாக்கும்.

அறிகுறிகள் என்ன?

சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, காது தொற்று, சைனஸ் தொற்று, தோல் வெடிப்பு, காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை பொதுவான அறிகுறிகள். உதடுகள், நகங்கள் அல்லது தோல் நீலம் அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் அவர்களால் சாதாரண அன்றாடச் செயல்பாடுகளில் பலவற்றைச் செய்ய முடியும். இந்த அறிகுறிகள் 1 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும்.

சிகிச்சைகள் என்ன?

மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கிளமிடியா நிமோனியா மற்றும் லெஜியோனெல்லா வகை பாக்டீரியாக்களால் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலம் வேகமாக பரவும். வெளியிடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது நல்லது.

மற்றவர்களுடன் கைகுலுக்குவதை தவிர்க்கலாம். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது மூக்கு மற்றும் வாயை தொடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், கைகளின் மூலம் மூக்கு மற்றும் வாய் வழியாக கிருமி சென்று காய்ச்சலை பரப்பும்.

அதேபோல மற்றவர்களின் எச்சில் பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தனியாக இருத்தல் அவசியம். இது நுரையீரல் தொற்றை ஏற்படுத்தும் காய்ச்சல் என்பதால், உடனடியாக டாக்டரிடம் காண்பித்து மிதமான ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நோய் பெரியவர்களை தாக்கினால் தாங்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். இளம் வயதினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதோடு இணை நோய்கள் எதுவும் இருக்காது என்பதால், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு வந்து விடுவர். கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» sağlıklı dişler için bunlardan uzak durun !. noleggio yacht con equipaggio. Er min hest syg ? hesteinternatet.