Amazing Tamilnadu – Tamil News Updates

தவெக பொதுக்குழு: தீர்மானங்கள் சொல்லும் அரசியல் வியூகம் என்ன?

மிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் , காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட தவெக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதாலும், இங்கு விவாதிக்கப்படும், பேசப்படும் விஷயங்கள், பிரச்னைகள் மற்றும் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்றவை தான் சமகால பிரச்னைகளில் தவெக-வின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு உணர்த்தும். மேலும், தவெகவின் அடுத்தகட்ட அரசியல் செயல் திட்டங்களை வகுக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதால் இது குறித்து அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும், 2026 தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக – தவெக இடையே முதல்கட்ட பேச்சு நடந்து, பின்னர் அது அப்படியே நின்று போனதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால், தவெக-வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்? தொடர்ந்து அதிமுக-பாஜக மீதான மென்மையான எதிர்ப்பு போக்கையே பொதுக்குழுவில் தவெக வெளிப்படுத்துமா அல்லது திமுகவை விமர்சிப்பது போன்று அதிமுக-பாஜக-வையும் விமர்சிக்குமா என்ற கேள்விகளையும் எழுப்பி இருந்தது.

இந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தில் இருமொழிக் கொள்கை, டாஸ்மாக் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து 17 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள்:

ஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.
ருமொழிக் கொள்கையில் உறுதி.
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை.
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
ட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம்.
டாஸ்மாக்கின் ஆயிரம் கொடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
லங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு.
ன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும்.
கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்.
ட்சி தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கத் தலைவருக்கே முழு அதிகாரம் என முழுமனதுடன் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது உட்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானத்தில் வெளிப்படும் எதிர்கால வியூகம்

17 தீர்மானங்கள் மூலம், மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியும், தமிழர் உரிமைகளை வலியுறுத்தியும், ஆளும் திமுக அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்தும் தவெக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. என்றபோதிலும்,வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு போன்றவை மத்திய அரசை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

அதேநேரம், பாஜக-அதிமுக கூட்டணியை நேரடியாக விமர்சிக்காமல் தவிர்த்தது, எதிர்கால கூட்டணி சாத்தியங்களை ஆராயும் வியூகமாகவும் இருக்கலாம். 2026 தேர்தலை நோக்கிய பயணத்தில், தவெக-வின் இந்த தீர்மானங்கள் அதன் அரசியல் பாதையை வடிவமைப்பதற்கான முதல் படியாக அமைந்துள்ளன.

தலைமைக்கு முழு அதிகாரம்

கட்சியின் முடிவுகளை எடுக்க தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது, தவெக-வின் அமைப்பு ரீதியாக ஒரு தலைவர் சார்ந்த கட்சியாக இயங்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. “கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்” என்ற தீர்மானம், தமிழக அரசியலில் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் தாக்கத்தை தவெக ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது. பெரியார் பெயரை பன்னாட்டு அரங்கிற்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் இதை வலியுறுத்துகிறது.

அடுத்ததாக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் என்ன பேசப்போகிறார் என்பது குறித்தே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version