மத்திய பட்ஜெட் 2025 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், உலகில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடும் நாட்டின் வளர்ச்சியும் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏழ்மை ஒழிப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம்
மேலும், இந்த பட்ஜெட்டில் ஏழ்மை ஒழிப்பு, இளைஞர்கள், விவசாயிகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு, நகர்ப்புற வளர்ச்சி, சுரங்கம், நிதித்துறை, மின்சாரம் மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் ஆகிய 6 துறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும் இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை.
வேளாண்மை
பிரதமரின் ‘தன் தியான் கிருஷி யோஜனா’ திட்டத்தின் மூலம் 1.70 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள்
எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில்முனைவோருக்கு கடனுதவி
பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு, புதிதாக தொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி வழங்கப்படும்.
‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டம் கூடுதல் செலவினத்துடன் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்.
22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
காலணி மற்றும் தோல் துறைகளுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தொழில்முனைவோரை வலுப்படுத்த Startups நிறுவனங்களுக்காக புதிய நிதி அமைப்பு உருவாக்கப்படும்.
உலகளாவிய கூட்டாண்மைகளுடன் திறன் மேம்பாட்டுக்கான 5 தேசிய சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும்.
பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் – NIFTEM) அமைக்கப்படும்.
மருத்துவ படிப்பில் 10,000 கூடுதல் இடங்கள்
ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் 10,000 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் மருத்தவப்படிப்பில் 75,000 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
100 புதிய விமான நிலையங்கள்
அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.
பீகாரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு கல்விக்கு ரூ.500 கோடி
செயற்கை நுண்ணறிவை கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும்.
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 – 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும்.
5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
அடுத்த வாரம் புதிய வருமான வரி மசோதா
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.
காப்பீட்டுத் துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
36 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு
‘இந்தியாவின் குணமாகுங்கள்’ ஹீல் இன் இந்தியா (Heal in India) பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு.
புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரியில் இருந்து முழுமையான விலக்கு.
பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும்.
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ‘டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.