Amazing Tamilnadu – Tamil News Updates

வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்?

த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் நாளை 2024-25 ஆம் நிதியாண்டுக்கான நாளை தாக்கல் செய்ய உள்ளார். இதனையொட்டி, அவர் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கான துறைகள் என்னென்ன என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்

2024 – 25 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், “உலகளாவிய பொருளாதார செயல்திறன் நிச்சயமற்ற நிலையில் இருந்தபோதிலும், வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி ஊக்கிகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தன. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போர் மற்றும் மோதல் போக்குகளின் தாக்கம் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் எதிரொலித்தது.

நாட்டின் குறுகிய கால பணவீக்கத்தால் பாதிப்பு இல்லை. எனினும், பருப்பு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட விலை உயர்வால் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலைவாசியின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024 ஆம் நிதியாண்டில் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்கால வேலை வாய்ப்பு துறைகள் என்னென்ன?

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 476 பக்கங்கள் கொண்ட அந்த ஆய்வறிக்கையில், நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, வேளாண் விளை பொருள் சார்ந்த உணவு உற்பத்தி பணிகள், gig economy ( விரும்பிய நேரத்தில் விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் செய்து கொள்ளும் முறை ) போன்றவை மூலம் வேலைவாய்ப்புகள் பரவலாக, குறிப்பாக கிராமப்புறங்களில் , அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AI சார்ந்த வேலை வாய்ப்புகள்

AI இன் விரைவான வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் வேளாண் தொழில்நுட்பம், தொழில் மற்றும் வாகனம், சுகாதாரம், BFSI எனப்படும் வங்கி, நிதிச் சேவை, காப்பீடு துறை மற்றும் சில்லறை வணிகம் போன்ற துறைகளில் AI ஏற்கனவே குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. இவற்றிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

gig வேலை வாய்ப்புகள்

gig பணியாளர்களின் எண்ணிக்கை 2029-30க்குள் 23.5 மில்லியனாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது விவசாயம் அல்லாத தொழிலாளர்களில் 6.7 சதவீதம் அல்லது இந்தியாவில் உள்ள மொத்த பணியாளர்களில் 4.1 சதவீதம் ஆகும். இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் திறக்கும்.

வேளாண் உணவு உற்பத்தி துறை

வேளாண் உணவு உற்பத்தி துறையானது ‘நடைமுறை மற்றும் பரவலாக்கப்பட்ட முறையில் வேலைகளை உருவாக்குவதற்கான வளமான துறையாக’ முன்மொழியப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்கான பல வாய்ப்புகளைக் கொண்டதாகவும் இத்துறை உள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் பசுமை வேலை வாய்ப்பு

2030 வாக்கில், தூய்மையான எரிசக்தி முயற்சிகள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற மின்சார உற்பத்தி திறனை அடைய 238 ஜிகாவாட் சூரிய சக்தி மற்றும் 101 ஜிகாவாட் புதிய காற்றாலை ஆகியவற்றை நிறுவுவதன் மூலம் சுமார் 3.4 மில்லியன் வேலைகளை (குறுகிய மற்றும் நீண்ட கால) உருவாக்க முடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த வேலைகள் காற்றாலை மற்றும் ஆன்-கிரிட் சோலார் எனர்ஜி துறைகளில் உருவாக்கப்படும். இந்த பசுமை வேலைகளில் சுமார் ஒரு மில்லியன் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version