Umagine TN: கோவையில் அமையப் போகும் பிரமாண்ட AI தொழில்நுட்ப பூங்கா!

மிழக சட்டசபையில், கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது யுமாஜின்( UMAGINE ) – வருடாந்திர தொழில்நுட்ப உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இரு முறை Umagine TN மாநாடு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடந்த வருட Umagine மாநாட்டின் போது 26 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் மாநிலம் அடைந்துள்ள வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் மகத்தான கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் UMAGINE TN 2025 என்னும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (9.1.2025 மற்றும் 10.1.2025) நடைபெறுகிறது.

இந்த தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தின் நீடித்த, நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் மாநாடு. வணிகத்தையும், தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதில் மற்றவர்களை விட முன்னோடியாக தமிழகம் உள்ளது. மின் வாகன உற்பத்தி, வளரும் தொழில்நுட்பங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

3 ஆவது முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. 2,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம். புத்தாக்கம், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் பெருகத்தான் செய்யும். கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ஏ.ஐ-க்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. சைபர் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

சிறிய நகரங்களிலும் எல்காட் தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது. உண்மையான வளர்ச்சி சமச்சீராக இருக்க வேண்டும். புத்தாக்கம், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல், இந்த வளர்ச்சியே போதும் என நான் நினைத்தது இல்லை. தமிழகத்துக்கு இன்னும் வளர்ச்சி வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ் மென்பொருட்களை உருவாக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எந்த புதுமை வந்தாலும் அதை முயன்று பார்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. சைபர் செக்யூரிட்டிக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான கொள்கை ஏற்படுத்தினோம். 2021 ஆம் ஆண்டில் 14,927 இ-சேவை மையங்கள் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் 34,000 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் 1,204 இலவச வைஃபை மையங்களை நிறுவியிருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்ப குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நாம் அடுத்தகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் கூடுதல் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மாநாட்டில் விவாதிக்கப்படும் விஷயங்கள்…

இந்த Umagine TN 2025 மாநாட்டில், சமமான பொது கொள்கைகள் மற்றும் நிர்வாகம் (Equitable Public Policy And Governance), காலநிலை தாக்கம் மற்றும் நிலைத்தன்மை (Climate Impact And Sustainability), பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிலாளர் மாற்றம் (Economic Growth And Work Force Transformation) போன்ற முக்கிய பொருண்மைகள் குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்பம் (Deep Tech), காலநிலை மாற்றம் (Climate Change), Quantum Computing, தொடக்க சூழல் அமைப்பு (Startup ecosystem), உயிர்ப்பூட்டல், (Animation) காட்சி விளைவு, (Visual Effects) விளையாட்டு, (Gaming) மற்றும் களிப்படக் கதை (Comics), உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centre), திறன் மேம்பாடு (Talent Development) மற்றும் மின் வாகனம் (Electric Vehicle) போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் 100-க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover the impact of air pollution on. The government is set to expand infrastructure around the lake region to aid full exploitation of the blue economy. 최신 온라인 슬롯.