Amazing Tamilnadu – Tamil News Updates

‘கல்லூரி தேர்தல்’ – லயோலா கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்த அமைசர் உதயநிதி!

சென்னை, லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை உதயநிதி ஸ்டாலினும் லந்து கொண்டார். அந்த வகையில், லயோலா கல்லூரியில் பயின்று பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் முன்னாள் மாணவர்களான இந்திய அரசின் முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன், ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சந்தோஷ் மேத்யூ, கோல் பந்தாட்ட வீராங்கனை வித்யா பிள்ளை, பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், முன்னாள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகோபால் சந்திரசேகர், திரைப்பட நடிகர் அரவிந்த்சாமி ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

உதயநிதி பகிர்ந்த லயோலா கல்லூரி நினைவுகள்

விழாவில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது லயோலா கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்தார். அவர் பேசுகையில்,”லயோலாவின் 100-வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்துகள். மூன்று நாட்களுக்கு முன்பு லயோலா கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நான் முதலமைச்சராக வரவில்லை முன்னாள் மாணவரின் தந்தையாக வந்தேன். அதேபோல் நான் அமைச்சராகவே சட்டமன்ற உறுப்பினராகவோ இங்கு வரவவில்லை. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவராகவே இங்கு வந்துள்ளேன்.

பள்ளியில் 92% மதிப்பெண்கள் பெற்று லயோலா கல்லூரியில் சேர எண்ணிய போது, என்னை லயோலா கல்லூரியில் சேர்க்கவில்லை. அப்போது, எனது தந்தை சட்டமன்ற உறுப்பினர் மட்டும்தான். தாத்தா முதலமைச்சராக கூட இல்லை.நான் பின்னர் எனது அம்மாவை அழைத்து வந்து கல்லூரியில் சீட் கேட்டேன்.

அப்போது கல்லூரி நிர்வாகம், ‘கல்லூரியில் நடக்கும் தேர்தலில் நான் நிற்க கூடாது’ என என்னிடம் உறுதிப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் சேர்த்தனர். ஆனால்நான் இப்போது, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக , அமைச்சராக இங்கு வந்துள்ளேன்.இதற்கு லயோலாவின் வளர்ப்புதான் காரணம்” என்றார்.

Exit mobile version