ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை மாற்றம்… துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்… பின்னணி தகவல்கள்!

ரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குத் தயாராகும் வகையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 22-ம் தேதிக்குள் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சரவையை மாற்ற ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த உடனேயே தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சில அமைச்சர்கள் மீதான செயல்பாடுகள் மீதான அதிருப்தி மற்றும் அவர்கள் மீது கட்சியினர் தெரிவிக்கும் புகார்கள் காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவை மாற்றம் குறித்து கடந்த சில வாரங்களாகவே தீவிரமாக ஆலோசித்து வந்ததாக கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், அந்த முடிவை அவர் தள்ளிப்போட்டிருந்த நிலையில், தற்போது அமைச்சரவை மாற்றத்துக்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்

இதில் முக்கியமாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டதே, அவரை முதல்வர் பதவிக்கு நிர்வாக ரீதியாக தயார்படுத்த தான் என்றும், அதனால் தான் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, வறுமை ஒழிப்பு ஆகிய துறைகளுடன், முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு திட்ட அமலாக்கத் துறையும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படப்போவது நிச்சயம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மு.க. ஸ்டாலின் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக திமுக-வின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி விஷச் சாராய நிகழ்வு, ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்பவம் உட்பட சமீப காலமாக ஆட்சி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்தில்கொண்டும், ஆட்சி நிர்வாகத்தை சுமூகமாக நடத்திச் செல்ல ஏதுவாகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் பணிச் சுமையைக் குறைக்கும் விதமாகவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நிர்வாகி மேலும் தெரிவித்தார்.

மேலும் நேற்று முன்தினம் உள்துறை செயலாளர் அமுதா உட்பட 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் கூட இந்த நடவடிக்கையின் ஒரு அம்சமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு தோதான அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2026 தேர்தலுகாக…

முன்னதாக, உதயநிதி அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, அவர் விருப்பமில்லாமலேயே அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக கட்சி மட்டத்தில் பேசப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியது. இது குறித்துப் பேசிய திமுக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர், ” உதயநிதியின் இளம் வயது மற்றும் சினிமா பிரபல அந்தஸ்து காரணமாக இதுபோன்ற வதந்திகள் எழுகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது துணை முதல்வர் பதவி திணிக்கப்படவில்லை. மாறாக அவராகவே தான், அந்த பெரிய பொறுப்பை தருமாறு தாமாகவே கேட்டுள்ளார். அடுத்த தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்பதால், முதலமைச்சரும் அதற்கு ஒப்புக்கொண்டார். துணை முதல்வர் பதவி வழங்குவதால், அது 2026 தேர்தல் பிரசாரங்களில் உதயநிதி முக்கிய பங்கு வகிக்க உதவும்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றைப் பிரித்து இந்த புதுமுகங்களுக்கு வழங்க மு.க. ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Simply the best the fender telecaster !. Copyright © 2020 leroy agency press + direct news today + 1 news today broadcasting + erika leroy de saxe. Hidden paradise : where are the faroe islands ? why is everyone curious about it ?.