TNPSC குரூப் 1 தேர்வு: சான்றிதழை பதிவேற்ற இறுதி வாய்ப்பு!

மிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பை அந்த ஆணையம் அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதார்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் வருகிற 2 ஆம் தேதி மாலை 11.59 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்தகவல் அவ்விண்ணப்பதார்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம்) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில், அதாவது ஓடிஆர் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sailing yachts & boats. hest blå tunge. The real housewives of potomac recap for 8/1/2021.