Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தின் தொழில், வேலை வாய்ப்பு, தனிநபர் வருமானம் என்ன..? விளக்கும் பொருளாதார ஆய்வறிக்கை!

ந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழன் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று தொடங்கி, சில தினங்களில் முடிவடைந்தது. இந்நிலையில், அடுத்த கூட்டத்தொடர் நாளை மார்ச் 14 ஆம் தேதி தொடங்குகிறது.

காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் கூடியதும், 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

பொருளாதார ஆய்வறிக்கை

இந்நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் இங்கே…

கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சவால்களை எதிர்கொண்ட தமிழ்நாடு, 2021-22இலிருந்தே 8% அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து எட்டி வருகிறது 2024-25 இல் 8% அல்லது அதற்கு மேல் வளர்ச்சியை தொடரும்.இந்தியாவின் GDPயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.21%இந்தியளவில் வாகன உதிரிப்பாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தனிநபர் வருமானம்

தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.2.78 இலட்சம் (2022-23). தேசிய சராசரி – ரூ.1.69 இலட்சம், தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகம். மற்ற முக்கிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம், கொள்முதல், சக்தி சமநிலை (PPP)-க்கு சரிசெய்யப்படும்போது, அர்ஜென்டினா மற்றும் துருக்கி போன்ற நாடுகளுடன் ஒப்பிடத்தக்கது. இருப்பினும், மாவட்டங்கள் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் தனிநபர் வருமானத்தில் முன்னணியில் உள்ளன, அதே நேரத்தில் சில தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைவாகவே உள்ளன.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெருநகரங்களைத் தாண்டி, மாவட்டங்களிலும் பரவியுள்ளது.சேவைத் துறை 53.63%, உற்பத்தித் துறை 33.37%, விவசாயம் 13% பங்களிப்பு வழங்குகின்றன.2030 க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய திட்டமிடல்.தமிழ்நாட்டில் 2019-20’ல் 6% என்றிருந்த நகர்ப்புறப் பணவீக்கம் 2024-25’ல் 4.5% ஆகக் குறைந்துள்ளது.நகர்ப்புற பணவீக்கம் 4.5% ஆகவும் கிராமப்புறத்தில் 5.4% ஆகவும் உள்ளது.

தமிழ்நாடு அரசு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் (ஜி.எஸ்.வி.ஏ.வில்) விவசாயம் 6% பங்களிப்பை அளித்துள்ளது. 2019-20இல் மொத்தப் பயிர்ப் பரப்பில் 32.1% ஆக இருந்த நெல்லின் பங்கு 2023-24இல் 34.4% ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கும் கடன் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.58 லட்சம் கோடியாக உயர்வு.

உள்நாட்டு உற்பத்தியில் 11.90% பங்களிப்பு

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு 11.90% பங்களிப்பு அளிக்கிறது.MSME தொழில்களில் தமிழ்நாடு, தேசிய அளவில் இரண்டாம் இடம். 2024 முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு, 14.55 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கம். வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.20,157 கோடியாக உயர்வு.

தமிழ்நாட்டின் நகர்ப்புரப் பணியாளர்களில் 54.63% பேர் சேவைத் துறையில் பணிபுரிகின்றனர். இது தேசிய சராசரியான 58.07%க்கு அருகில் உள்ளது.2021-22 மற்றும் 2023-24க்கு இடையில், உற்பத்தித் துறை 8.33% ஆகவும், கட்டுமானத் துறை 9.03% ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாடு, இந்திய பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழும்.

ஜிஇஆர் – ல் முன்னிலை

தமிழ்நாட்டின் கடன்-வைப்பு விகிதம் (CDR) 117.7%, இந்திய சராசரி 79.6%. நாட்டில் அதிகமான ATMகளை (24,390) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் 64.6%, தேசிய சராசரி 64.3%. பல்வேறு சமூகக் குறியீடுகளில், தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.மொத்த மாணவர் பதிவு (ஜிஇஆர்)ல் இந்தியாவை விட தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

நாட்டிலயே சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது. நீடித்த வளர்ச்சிக்கான SDG குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.பல்வேறு சுகாதாரக் குறியீடுகளிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. காலநிலை மாற்றத்திற்கெதிரான திட்டங்களுக்காக ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் பசுமை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version