Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

பயன்பாட்டிற்கு வரும் அரசுப் போக்குவரத்துக் கழக புதிய பேருந்துகள்!

மிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1535.89 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூபாய் 420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 167 பேருந்துகள் நவம்பர் 2024-க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். SADP திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 446.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 888 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள 112 பேருந்துகள் நவம்பர் 2024 க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்.

2024-25 ஆம் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 1535.89 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டு, 503 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி நிர்ணய ஆணை வழங்கப்பட்டு, நவம்பர் 2024 க்குள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மேலும் 2,544 பேருந்துகளுக்கு விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி (KfW) உதவியோடு மொத்தம் 2,166 BS-VI டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது . இதில் 552 தாழ்தளப் பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு 59 தாழ்தள பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.மீதமுள்ள 493 பேருந்துகள் நவம்பர் 2024-க்குள் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மேலும், 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள்எடுக்கப்படும்.

500 – மின்சார பேருந்துகளுக்கு ஒப்பந்த புள்ளி தயார் செய்யப்பட்டு KfW-ன் ஒப்பந்த புள்ளி ஒப்புதலுக்கு பிறகு கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உலக வங்கி உதவிவுடன் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு GCC அடிப்படையிலான 500 மின்சார பேருந்துகள் இயக்குவதற்கு விலைப்புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ளன. விரைவில் பணி ஆணை வழங்கப்படும்.

23.08.2024 வரை, 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, இது வரை 1,796 புதிய பேருந்துகள். 2022-23 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 910 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

2023-24 ஆம் நிதியாண்டில் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூபாய் 76.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 154 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 1,500 பேருந்துகளில் 23.08.2024 வரை அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1064 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது எனத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version