கோடை வெப்பத்தை தணித்த மழை… எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

மிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது. பல மாவட்டங்களில் வெயிலின் கொடுமை சதமடித்து, மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை 35-38 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி, மக்களை வீட்டிற்குள்ளேயே முடங்க வைத்தது.

ஆனால், இந்த வெப்ப அலையில் இருந்து சற்று நிம்மதி அளிக்கும் வகையில், தமிழகத்தில் மழை தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் தற்போது வெப்பம் மற்றும் மழை என இரு வேறு பருவநிலைகளை ஒருங்கே அனுபவித்து வருகின்றன.

இன்று அதிகாலை முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளான பல்லாவரம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பம்மல் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்தது. இதேபோல், திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதே இதற்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த மழை, வெப்பத்தால் தவித்த மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

ஏப்ரல் 5 வரை கனமழை

மேலும், வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 15 மாவட்டங்களில் ஏப்ரல் 3 மற்றும் நாளை ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை, விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மற்றும் நீர் தேவையை பூர்த்தி செய்ய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சில உள் மாவட்டங்களில் இன்னும் வெப்பநிலை குறையவில்லை. எடுத்துக்காட்டாக, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளில் வெப்பம் 36 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. மழை பெய்யும் பகுதிகளில் வெப்பநிலை சற்று குறைந்தாலும், முழுமையான நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Avant garde interior design co. Alex rodriguez, jennifer lopez confirm split. Facing wаr іn thе mіddlе eаѕt and ukraine, thе us lооkѕ fееblе.