தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு!

த்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்குவங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆந்திரா, அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

வடக்கு ஆந்திரா, அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 தினங்களில் வடக்கு வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும். இதனால், இன்று கடலோர ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழையும், அடுத்து வரும் நாட்களில் ஒடிசாவில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6 முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர், சென்னை மணலியில் 4 செ.மீ.,சென்னை திருவொற்றியூர், ஆவடி, கத்திவாக்கம், மதுரவாயல், வானகரம், அண்ணா நகர்,ராயபுரம், திருவள்ளூர், சோழவரம், பூண்டி,தாமரைப்பாக்கம், புதுச்சேரி பாகூர், நாகைமாவட்டம் வேளாங்கண்ணி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 3 செ.மீ. மழைபதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sailing yachts & boats. Hest blå tunge. Tonight is a special edition of big brother.