வேலூர், திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூரில் புதிய தொழில் முதலீடுகள்… 19,000 வேலைவாய்ப்பு!

மிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்பதால், அந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பெரிய அளவில் அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பில்லை.

எனவே 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையிலான பல்வேறு முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.

அதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழகத்தில், 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடிக்கான 15 புதிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன், பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல், கடந்தாண்டு அக்டோபர் 8 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.38,699 கோடி மதிப்பில் 49,931 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கும் 14 திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கவும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற நிலங்களில் ஆக்கிரமி்ப்பு செய்து வாழ்ந்து வரும் 86,000 பேருக்கு பட்டா வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பு காணப்பட்டது.

ரூ.7,375 கோடி முதலீடு

இந்நிலையில், தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி, உணவு பதப்படுத்துதல் போன்ற தொழிற்பிரிவுகளில், ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொழில் முதலீடுகள் வேலூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, பெரம்பலூர் மாவட்டங்களில் அமைய உள்ளதாகவும், இதன் மூலம் அங்கு அமைக்கப்படும் தொழில் நிறுவனங்கள் மூலம் 19, 000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Lizzo extends first look deal with prime video tv grapevine. 자동차 생활 이야기.