பால் உற்பத்தியில் தமிழகம் சாதனை… உயரும் கிராமப்புற பொருளாதாரம்!

மிழ்நாட்டின் பால் உற்பத்தி 2017 முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக இருந்தது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தமிழ்நாட்டின் பல் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் பால்வளத்துறையின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, பால் உற்பத்தி 2021 முதல் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 9.790, 10.107, 10.317 மில்லியன் டன்களாக உயர்ந்திருப்பதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB)வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவும் அதிகரிப்பு

தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு (per capita availability) 2019-2020 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது. 2022-2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது.

2022-23 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 இலட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.12.58 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2023-24 ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 லட்சமும் மற்றும் இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 இலட்சமும் உற்பத்தியுடன் இணைந்த வழங்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை

2022-23ம் ஆண்டில் 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1,951.74 இலட்சம் போனஸ் ஆகவும் ரூ.3432.62 லட்சம் பங்கு ஈவுத்தொகையாகவும் ரூ.38.63 இலட்சம் ஆதரவு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் 5 இலட்சம் கறவை மாடுகளுக்கு 85 விழுக்காடு மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று பால் உற்பத்தியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்கிறது. எதிர்காலங்களில் இன்னும் புதிய சாதனைச் சிகரங்கள் எட்டப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Raven revealed on the masked singer tv grapevine. 자동차 생활 이야기.