Amazing Tamilnadu – Tamil News Updates

22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 22 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்

கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர உத்தரவு

இதையடுத்து 22 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அவசர உத்தரவு ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், கனமழை எச்சரிக்கை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உடனே மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

24 மணிநேரமும் வெள்ளத் தடுப்புக்காக உஷாராக இருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version