பழங்குடியினர் குறித்த ஆய்வு: ரூ.10,000 உதவித் தொகையுடன் படிக்கலாம்!

ழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலாய்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாத ஊக்கத் தொகையுடன் கூடிய “தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்” என்ற புதிய திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டின் மானியக் கோரிக்கையின்போது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், இத்திட்டத்தை நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்த 1 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான உதவித் தொகை விவரம்

இந்த ஆய்வு படிப்புக்கு எந்த ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இறுதி ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்கள் 25 பேருக்கு 6 மாத காலத்துக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரமும், அதேபோல் முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்கள் 45 பேருக்கு 3 ஆண்டு காலத்துக்கு மாதம்தோறும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதி

இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற, சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க அதிகபட்ச வயது ஆண்களுக்கு 50 க்குள்ளும், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 55 க்குள்ளும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் வழக்கமான மற்றும் முழு நேர இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வு படிப்பு ஆகிய ஏதாவது ஒன்றில் ( UG, PG, Ph.D. and post-doctoral programmes) சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்கான நெறிமுறைகளை “https://www.tn.gov.in/forms/deptname/1” என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

தற்போது தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தினை 2024-2025 ஆம் ஆண்டில் செயல்படுத்த இத்திட்டத்திற்கான விண்ணப்பம் 05.11.2024 லிருந்து இணையவழியிலும் (Online) மற்றும் இயன்முறையிலும் (Offline) வரவேற்கப்படுகின்றன.

இணையவழியில் (Online) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் “https://forms.gle/BDdkHTL6Ltkt5ToQ7” என்ற இணைப்பில் நேரடியாக 30.11.2024-க்குள் விண்ணப்பிக்குமாறும் மற்றும் இயன்முறையில் (Offline) விண்ணப்பிக்க விரும்புவர்கள் “https://www.tn.gov.in/forms/deptname/1” என்ற இணைப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடைசி தேதி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இயக்குநர், பழங்குடியினர் நலன், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு 30.11.2024 க்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேற்கண்ட விவரங்களை மாணவர்களுக்கு தெரிவித்தும் அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, அறிவுறுத்துமாறு தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Yelkenli yatlar ve tekneler. 000 dkk pr. Tonight is a special edition of big brother.