தமிழக கல்வி நிதி ஒதுக்கீட்டைப் பாதிக்கும் பிஎம்ஸ்ரீ பள்ளி விவகாரம்… பிரச்னை என்ன?

மிழக அரசின் கொள்கை முடிவின்படி இரு மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் உறுதியாக உள்ளது. ஆனால் புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கல்வியை செயல்படுத்த வேண்டிய நிலை தமிழகத்துக்கு ஏற்படும் என்பதால், இதற்கு தமிழகம் உடன்பட மறுக்கிறது. இதனால், கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்துக்கான நிதியை வழங்காத மத்திய அரசு, அதை வழங்கிவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும், ஆனால், மத்திய அரசு தெரிவித்த நிதி ஒதுக்கீடு பட்டியலில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் பெயர்கள் இடம் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2023-2024 ஆம் ஆண்டின் 4 ஆம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2152 கோடியும் என மொத்தம் ரூ.2401 கோடியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டமானது 2018 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காகத் திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்பளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது, ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் விடுவிப்பு செய்யப்படுகிறது. அதன்படி, 2024-25 ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60 சதவீத பங்கான ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இன்னமும் விடுவிக்கவில்லை.

சிக்கலை ஏற்படுத்தும் பிஎம்ஸ்ரீ பள்ளிகள்

2023-24 ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டிற்கென ரூ.3,533 கோடி திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிதியிலும் இரண்டு தவணைகள் மட்டுமே விடுவிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் தவணை விடுவிப்பதற்கு முன்பாக ஒன்றிய அரசு பிஎம்ஸ்ரீ பள்ளிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் நிதியினை விடுவிக்க முடியும் என வலியுறுத்தியுள்ளது.

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, தனது அறிக்கையில், பிஎம்ஸ்ரீ பள்ளிகள் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல் நிபந்தனையாக மும்மொழி கொள்கையை பின்பற்றுவதை வலியுறுத்தி உள்ளது. இந்த நிபந்தனையானது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறைக்கு முரணாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதையும், ஏற்கனவே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்டக்கூறுகளைச் செயல்படுத்துவதையும் ஒன்றாகக் கருதாமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட நிதியினை விடுவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், 2024-25 ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60% பங்கான ரூ.2,152 கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 17,632.41 கோடி நிதியை மத்திய அரசு விடுத்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக் கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான 4 ஆம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி ரூ.2,152 கோடியும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய அரசு வெளியிட்டுள்ள சமக்ரசிக்‌ஷா நிதி விடுவிப்பு பட்டியலில் மொத்தம் 33 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dprd kota batam. Charter a luxury private yacht or rent a affordable sailing boat choice is yours. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?.