கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட் சுடுமண் தொட்டி!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18 ஆம் தேதி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் மேற்பார்வையில் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் மற்றும் தொல்லியல் மாணவர்கள் ஆகியோருடன் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அகழாய்வில் இதுவரையிலும் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டகாய், ‘தா’ என்ற தமிழி எழுத்து, மீன் உருவ பானை ஓடுகள், சுடுமண் அணிகலன், சுடுமண் குழாய், செங்கல் கட்டுமானம், சிவப்பு நிற பானை என 50 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தோண்டப்பட்ட பத்தாம் கட்ட அகழாய்வில் ஒன்றரை அடி விட்டம் கொண்ட சுடுமண் தொட்டி ஒரு அடி உயரம் வரை மேற்பகுதி மட்டும் வெளிப்பட்டுள்ளது. இதன் விளிம்பில் கலைநயம் மிக்க வளைவான கோடுகள் உள்ளன.

ஏழம் கட்ட அகழாய்வின் போது மீன் உருவம் பொறிக்கப்பட்ட உறைகிணறும், சுடுமண் தொட்டியின் பக்கவாட்டுப் பகுதியில் கயிறு போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டது. பத்தாம் கட்ட அகழாய்வும் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்திலேயே நடந்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள சுடுமண் தொட்டி அருகிலேயே இருவண்ண சுடுமண் பானை, கொடி போன்று வரையப்பட்ட பானை , வளைவான கோடுகள் கொண்ட பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

சுடுமண் தொட்டி

அகழாய்வில் ஒவ்வொரு நாளும் அரிய தொல்பொருட்கள் கிடைத்து வருவது தொல்லியல் துறை அலுவலர்களுக்கும் தொல்லியல் ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுவரை தோண்டப்பட்ட 8 குழிகளிலும் 5 பெரிய பானைகள், 20க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பானைகள் என மொத்தம் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று வட்ட வடிவத்தில் சுடுமண் தொட்டியின் வாய்ப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோன்று ஏராளமான சான்றுகள் கிடைத்து வருகின்றன. இன்னும் கூடுதல் குழிகளில் அகழாய்வு பணிகளை விரிவுபடுத்தினால் நடக்கும் ஏராளமான அரிய தொல்பொருட்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. Lizzo extends first look deal with prime video tv grapevine. 자동차 생활 이야기.