Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் ரூ. 68,773 கோடி மதிப்பில் தொழில் திட்டங்கள் தொடக்கம் … 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்!

மிழ்நாட்டை வருகிற 2030-ஆம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அந்த இலக்கை அடைவதற்காக, அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் ஜவுளி, உணவு பதப்படுத்துதல், பார்மா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்களில் ரூ. 68,773 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட உள்ளன.

முதலமைச்சர் தொடங்கி வைத்த 19 தொழில் திட்டங்கள் (64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு)

ஓம்ரான், ஹை-பி (Hi-P), மதர்சன் எலெக்ட்ரானிக்ஸ், எல் & டி இன்னோவேஷன் கேம்பஸ், டிவிஎஸ் இண்டியோன் (லூகாஸ் டிவிஎஸ்), ஜூரோஜின் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெனால்ட் நிசான் தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம், சுந்தரம் ஃபாஸ்டர்னர்ஸ், ESJAY பார்மா, ENES ராம்ராஜ், கேப்ளின் பாயின்ட்,

வெக் இண்டஸ்ட்ரீஸ், மில்க் மிஸ்ட், குரிட் விண்ட் (Gurit Wind),ஹைப்ரோ ஹெல்த்கேர், ராயல் என்ஃபீல்டு (ஐஷர் மோட்டார்ஸ்), க்ரூபோ காஸ்மோஸ், ஜிபி சல்போனேட்ஸ் மற்றும் மதர்சன் ஆரோக்கியம்.

அடிக்கல் நாட்டிய 28 தொழில் திட்டங்கள் ( 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு)

செம்கார்ப், ராமடெக்ஸ், Ascendas Firstspace (விரிவாக்கம்), ESR Phase 3, மேப்பிள் ட்ரீ, செயின்ட் கோபேன், சென்ஸ்டார் (ஹூண்டாய் வெல்டிங்),
ஹூண்டாய் மோட்டார், மிட்சுபா கார்ப்பரேஷன், சட்ராக்/கியோகுடோ ( SATRAC/Kyokuto), பிரகதி வார்ஹவுசிங் ( Pragati Warehousing), கேப்ஜெமினி
பயாட்ஸ் (பிரேக்ஸ் இந்தியா) , சீப்ரோஸ், கிரீன்பேஸ், போன்ஃபிக்லியோலி (Bonfiglioli),பாலிஹோஸ், கேஆர்ஆர் ஏர் (KRR Air), பேட்டர் இந்தியா, மைவா பார்மா, ஸ்விங் ஸ்டெட்டர், சாஃப்ட்ஜெல், ஜி-கேர் கவுன்சில், டேப்லட்ஸ் இந்தியா, அரேமண்ட் ஃபாஸ்டனர் (ARaymond Fastener), பசந்த் பெட்டோன்ஸ் (Basant Betons),டாடா கம்யூனிகேஷன்ஸ், ஹைகல் டெக்னாலஜிஸ் (Hical Technologies).

இவை தவிர, மேலும் பல்வேறு வகையான திட்டங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அவை வருமாறு:

மோட்டார் வாகனங்கள், பொது உற்பத்தி, தொழிற் பூங்காக்கள்,மின்னணுவியல், மருத்துவ உபகரணங்கள், தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்,
உணவு பதப்படுத்துதல், ரசாயனங்கள்,ஜவுளி மற்றும் ஆடைகள், உயிர் அறிவியல் (Life Sciences), பசுமை ஹைட்ரஜன், கட்டுமானப் பொருட்கள் (Construction equipment) ஆகியவை.

எந்தெந்த மாவட்டங்கள், எவ்வளவு முதலீடு, எந்தெந்த நிறுவனங்கள்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதர்சன் எலெக்ட்ரானிக்ஸ் (ரூ2,600 கோடி முதலீடு; 2,800 பேருக்கு வேலைகள்)

எல்&டி இன்னோவேஷன் கேம்பஸ் (சென்னையில் உள்ள ஐடி பார்க்); 40,000 பேர் அமரும் வசதியுடன் ரூ3,500 கோடி முதலீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் டிவிஎஸ் இண்டியான் (லூகாஸ் டிவிஎஸ்); ரூ. 2,850 கோடி முதலீடு; 800 பேருக்கு வேலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூரோஜின் டெவலப்பர்ஸ் (House of Hiranandani)மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழில் பூங்கா; ரூ.2,000 கோடி முதலீடு; 1,500 பேருக்கு வேலைகள்

சுந்தரம் ஃபாஸ்டனர்ஸ், செங்கல்பட்டு; ரூ. 1,411 கோடி முதலீடு; 1,577 பேருக்கு வேலைகள்

ESJAY பார்மா, காஞ்சிபுரம்; ரூ. 1,000 கோடி முதலீடு; 1,500 பேருக்கு வேலைகள்

செம்கார்ப், தூத்துக்குடி – ரூ. 36,238 கோடி முதலீடு; 1,511 பேருக்கு வேலைகள்

செயின்ட் கோபேன், காஞ்சிபுரம் – ரூ. 3,400 கோடி முதலீடு; 1,140 பேருக்கு வேலைகள்

பிரகதி கிடங்கு, திருவள்ளூர் – ரூ. 1,500 கோடி முதலீடு; 2,500 பேருக்கு வேலைகள்

கேப்ஜெமினி, செங்கல்பட்டு – ரூ. 1,000 கோடி முதலீடு; 5,000 அமரும் வசதி

Exit mobile version