தனிநபர் வருமானம்: தேசிய அளவை விட முந்திய தமிழகம்!

மிழகத்தின் தனிநபர் வருமானம், கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தைவிட அதிகமாக இருந்ததாக தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23-ம் ஆண்டுக்கான விரைவு மதிப்பீடு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான முன்மதிப்பீடு ஆகியவற்றை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தயாரித்துள்ளது.

இதில், தமிழகத்தின் தனிநபர் வருமானம், கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தைவிட அதிகமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதி்ப்பில் 2022-23-ல் நடப்பு விலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தின் பணவீக்க வீதம் 2022-23-ல் 5.97 சதவீதம், 2023-24-ல் 5.37 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில், இந்தியப் பணவீக்க வீதம் 6.65 மற்றும் 5.38 சதவீதமாகவும் இருந்தன. மாநிலத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி, நிலையான விலையில் 2012 முதல் 21 வரை 5.80 சதவீதமாகவும், கடந்த 2021-24 வரை 3 ஆண்டுகளில் முறையே 7.89, 8.13, 8.23 சதவீதமாகவும் இருந்தது.

இதனால், 2012-21 வரையான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து, 2021-24 என மூன்றாண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதமாக உள்ளது. தமிழகத்தின் தனிநபர் வருமானம் நிலையான விலையில் 2022-23, 2023-24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தமிழக தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தைவிட 1.68 மடங்கு அதிகமாக உள்ளது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல், நடப்பு விலையில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் 2023-24-ம் ஆண்டில் தேசிய அளவில் தனிநபர் வருமானத்தைவிட 1.71 மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29 சதவீதம் மற்றும் 6.37 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47 சதவீதமும், 45.90 சதவீதமும் பங்களித்தது. 2023-24-ம் ஆண்டில் பணித்துறை நிலையான விலையில்9.25 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76 சதவீதம், பிறவகை போக்குவரத்துத் துறையில் 7.46 சதவீதம்,நிதி தொடர்பான பணிகளில் 9.29சதவீதம், கட்டிடம், மனை துறையில்10.08 சதவீதம், பிறவகைப் பணிகளில் 9.96 சதவீதம் என வளர்ச்சி காணப்பட்டது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பணித்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என தமிழக திட்டம், வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

League of legends wasd movement controls may soon be a reality. Özel yat kiralama. I’ll say it again – emilia perez is s—,” a final angry fan chimed in.