10 கோடிப் பார்வைகளைக் கடந்து ‘தமிழ் மின் நூலகம்’ சாதனை!

மிழ்ப் பண்பாடு, பாரம்பரியம், மரபு, நாகரிகம், கலை, இலக்கணம், இலக்கியம் முதலியவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பக் கணினித் தமிழை வளர்த்தெடுக்கவுமான பல்வேறு அரும்பணிகளைத் தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ் இணையக் கல்விக்கழகம் ஆற்றிவருகிறது.

இந்த நிலையில், தமிழக மின் நூலகம் (www.tamildigitallibrary.in) என்ற இணையதளத்தை தொடங்கிய தமிழ் இணையக் கல்விக்கழகம், இந்த மின் நூலகத்தை , கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிட்டது. இந்த மின் நூலகத் தளத்தில் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் அரிய நூல்கள், பருவ இதழ்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவை பதிவேற்றப்பட்டுள்ளன.

என்னென்ன புத்தகங்கள்?

இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிப் பக்கங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சீகன் பால்கு 1716 இல் லத்தீன் மொழியில் அச்சிட்ட ‘Grammatica Damulica’ என்னும் தமிழ் இலக்கண நூல், தஞ்சை சரபோஜி மன்னர் தொகுப்புகள், உ.வே.சா.வின் அரிய பதிப்புகள், தென்னிந்தியாவின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கூரியர் இதழ்கள், சித்த மருத்துவச் சுவடிகள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வெளியீடுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மேலும், சங்க இலக்கியங்கள், இலக்கண நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறார் இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொல்லகராதிகள், ஓலைச்சுவடிகள் என மிகப் பெரும் அறிவுச் சுரங்கமாக விளங்குகிறது இந்நூலகம்.

இராபர்டு கால்டுவெல் எழுதிய, ‘A comparative grammar of the Dravidian or South Indian family of languages’, ‘A History of Tinnevelly’ போன்ற நூல்களுடன் தந்தைப் பெரியாரின் ‘குடிஅரசு’, அறிஞர் அண்ணாவின் படைப்புகள், ‘திராவிடநாடு’, ‘நம் நாடு’, ‘தென்னகம்’, ‘போர்வாள்’, ‘மன்றம்’ என்பன போன்ற திராவிட இயக்கத்தின் முன்னணி இதழ்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் பிறந்தநாள் நிகழ்வைக் கொண்டாடும் வகையில் அவர் தொடர்பான 127 நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், ஒளிப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய www.tamildigitallibrary.in/voc என்ற வ.உ.சி. சிறப்பு இணையப் பக்கம் 18.11.2022 அன்று முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் ‘கலைஞர்100’ என்னும் தனித்த இணையப் பக்கம் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்பக்கத்தில் கலைஞர் தொடர்பான நூல்கள், இதழ்கள், உரைகள், ஒலி-ஒளிப் பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் உரிய தேடல் வசதியுடன் வெளியிடப்படவுள்ளன.

தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள், கலைத்துறையினர், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்குமான அரிய புதையலாகத் தமிழ் மின் நூலகம் திகழ்கிறது. இம்மின் நூலகம் 2021 மே மாதம் 1.5 கோடிப் பார்வையைக் கடந்தது; 2024 ஜனவரியில் 6.5 கோடிப் பார்வைகளைப் பெற்றிருந்தது. குறுகிய காலத்தில் தமிழ் மின் நூலகம் 10 கோடிப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. 陳元溢師傅多年來以卓越的服務能力和廣泛的專業知識為不同人士提供服務,並贏得了廣泛的 客戶讚許 和認可。. Rent a car/bike/boat roam partner.