ரஜினிகாந்த்: திடீர் உடல் நலக்குறைவு… அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், 10 நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பினார்.

செப்டம்பர் 20 அன்று நடந்த ‘வேட்டையன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அதில் சுமார் ஒரு மணி நேரம் பங்கேற்று, ‘மனசிலாயோ’ பாடலுக்கும் நடனமாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

இந்த நிலையில், ரஜினிகாந்துக்கு நேற்று மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த செய்தி வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு வரை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த தகவல் பரவியபடி இருந்தது. அவரது ரசிகர்கள் அப்போலோ மருத்துவமனை முன்பு திரண்டனர். இந்த நிலையில், செரிமான பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர மருத்துவ பரிசோதனையில், அவருக்கு வயிற்றுப் பகுதி ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது அடிவயிற்று பகுதிக்கு அருகில் ஸ்டென்ட் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரபூரவமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தற்போது ரஜினியின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை வார்டிலிருந்து வழக்கமான வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும், அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை விரைவில் செய்தி குறிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் குணமடைய முதல்வர் வாழ்த்து

இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைல் குணமடைய வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” எனக் கூறி உள்ளார்.

அதேபோன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார். ரஜினியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால் நேற்று இரவே மருத்துவமனைக்கு வர வைத்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

二、新北市:healthy new taipei 社群. Big brother all stars recap for 9/9/2020 : who won pov ?. 인기 있는 프리랜서 분야.