‘பசிப்பிணி இல்லா மாநிலம்… வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!’

மிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நிறுவனத்தின் பங்கு மகத்தானது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது 23.2.1972 அன்று இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. மத்திய அரசின் ‘இந்திய உணவுக் கழகம்’ ( Food Corporation Of India ) நிறுவனத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இதனை ஏற்படுத்தினார்.

நெல், பருப்பு போன்ற உணவு பொருட்களை கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கிகளில் சேமித்து வைத்தல், கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டத்திற்காக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைத்தல், நெல் போன்ற உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வது, நெல்லை அரைப்பதற்கு நவீன அரிசி ஆலைகளை இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்குக் குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்

இந்த நிலையில், “தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் பசிப்பிணி இல்லாத நிலை காணப்படுவதோடு, வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1,666 புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

“ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நெல் கொள்முதல்

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை இடைத்தரகர்கள் தலையீடின்றியும் கால தாமதமின்றியும் உடனடியாக விற்பனை செய்யும் பொருட்டு ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1 கோடியே 8 இலட்சத்து 35 ஆயிரத்து 621 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலன் கருதி, 358.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 259 மேற்கூரை அமைப்புடன்கூடிய நெல் சேமிப்புத் தளங்களை நிறுவ திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுவரை 213 நெல் சேமிப்புத் தளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை கட்டப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு

தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புப் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது” எனத் தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Niva bupa health insurance : a comprehensive overview trending news fox. Man in california is arrested for arson as wildfires rage in the west. 최신 온라인 슬롯.