பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் விவரம்…

பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15 தினங்களில் கொண்டாடப்படும் நிலையில், வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதலே பல்வேறு நகரங்களிலிருந்து சொந்த ஊர் செல்பவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். வழக்கமான ரயில், பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டன.

இதனால், தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் ஜனவரி 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களுக்கு 14 ,104 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கமாக இயக்கப்படும் 8,368 பேருந்துகளுடன் குறிப்பிட்ட இந்த நாட்களில், கூடுதலாக 5,736 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், அவை அனைத்தும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள்

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு – தூத்துக்குடி

வரும் ஜனவரி 10 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் 06569) இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11 ஆம் தேதி மைசூருக்கு இயக்கப்படும். இந்த ரயில் மைசூரு, பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி சென்றடையும்.

ஏற்கனவே, தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள்

சென்ட்ரல் – நாகர்கோவில்

சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (ரயில் எண் 06089), மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20 ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

திருநெல்வேலி – தாம்பரம்

திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06092), மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து (ரயில் எண் 06091) பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

தாம்பரம் – கன்னியாகுமரி

தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஜனவரி 13 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண் 06093), மறுநாள் பிற்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ராமநாதபுரம் – தாம்பரம்

ராமநாதபுரத்தில் இருந்து ஜனவரி 10, 12, 17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்- 06104), மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் ஜனவரி 11, 13, 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.

தாம்பரம் – திருச்சி

தாம்பரத்திலிருந்து ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் ஜன்சதாப்தி அதிவிரைவு ரயில் (ரயில் எண் 06191) இரவு 11:35 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கமாக, இந்த ரயில் அதே நாள்களில் திருச்சியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Noleggio yacht con equipaggio. hest blå tunge.