தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் உடல் உறுப்பு தானம்!

டந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த புஷ்பாஞ்சலி, அசோகன் என்ற மருத்துவத் தம்பதியினரின் இளம் வயது மகன் ஹிதேந்திரன் என்பவருக்கு சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டது. அப்போது தனது மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி, தமிழ்நாட்டில் முதல் உறுப்பு தானத்தை அந்த தம்பதியினர் துவங்கி வைத்தனர். அவரது இதயம், பெங்களூருவில் உள்ள ஒரு சிறுமிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 2008 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் பொதுமக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “தமது உறுப்புகளைத் தந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அன்று முதல் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அமைச்சரோ, மாவட்ட ஆட்சியரோ அல்லது மூத்த அதிகாரியோ இறுதிச் சடங்கின்போது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அப்போது ஒரு சிறிய விஷயமாக பார்க்கப்பட்டாலும், அந்த யோசனை வீரியமிக்கதாக இருந்ததால், உறுப்பு தானம் செய்வது குறித்து அதுவரை பொதுமக்களிடையே இருந்து வந்த தயக்கத்தை அது தகர்த்தெறிந்து, அவர்களின் அணுகுமுறையில் அது மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில், உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த11 மாதங்களில் மட்டும் மட்டும் இதுவரை 192 பேர், உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல், கார்னியா என மொத்தம் 1086 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 42, ராஜாஜி அரசு மருத்துவமனையில் 38, மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் 21,
கோவை அரசு மருத்துவமனையில் 20 உடல் உறுப்புகளும் தானமாக கிடைத்துள்ளன.

இது, கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023 ஆம் ஆண்டு 178 நபர்களும், 2022 ஆம் ஆண்டு 156 நபர்களும், 2021 ஆம் ஆண்டு 60 நபர்களும், 2020 ஆம் ஆண்டு 55 நபர்களும், 2019 ஆம் ஆண்டு 127 நபர்களும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு உடல் உறுப்பு அளிப்பதாக 6775 நபர்கள் உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Dancing with the stars queen night recap for 11/1/2021. : 작은 프로젝트부터 시작할 수 있는 플랫폼.