சென்னைக்கான 15 புதிய திட்டங்கள் அறிவிப்பு… பெண்கள் கல்லூரி , 9 அரசுப் பள்ளிகளுக்கு ரூ. 50 கோடி!

மிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கட்கிழமையன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் கேர்பாபு சென்னைக்கான 15 புதிய திட்டங்களை வெளியிட்டார்.

சென்னை பாரதி பெண்கள் கல்லூரி கூடுதல் வசதிகளோடு ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னையில் 9 அரசுப் பள்ளிகள் ரூ. 25 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னையில் 6 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் ரூ. 5 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னையில் 15 முதல்வர் படைப்பகங்கள் ரூ. 40 கோடியில் அமைக்கப்படும்.

பிராட்வே பிரகாசம் சாலையில் அதிநவீன பொது நூலகம் ரூ. 30 கோடியில் அமைக்கப்படும்.

சென்னை மாநகரில் 5 அரங்குகள் மற்றும் மைதானங்கள் ரூ. 37 கோடியில் மேம்படுத்தப்படும்.

டசென்னையில் 4 இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் ரூ. 8 கோடியில் அமைக்கப்படும்.

சென்னையில் 7 பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடியில் அமைக்கப்படும்.

சென்னையில் 6 அமுதம் அங்காடிகள் ரூ.22 கோடியில் அமைக்கப்படும்.

சென்னை வண்டலூர் கீரப்பாக்கத்தில் ரூ. 11 கோடியில் உணவுப் பொருள் கிடங்கு அமைக்கப்படும்.

ராயபுரம், சஞ்சீவிராயன் பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும்.

ராயபுரம், பனைமரத் தொட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் ரூ. 4 கோடியில் அமைக்கப்படும்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ. 10 கோடியில் மேம்படுத்தப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ. 21 கோடியில் மேம்படுத்தப்படும்.

சென்னை குரோம்பேட்டையில் ரூ. 10 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Charter a luxury private yacht or rent a affordable sailing boat choice is yours. 000 dkk pr. The real housewives of beverly hills 14 reunion preview.