போட்டித் தேர்வுக்கு தயாராக உதவும் ‘முதல்வர் படைப்பகம்’: வசதிகள் என்ன?

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் ஜெகந்நாதன் தெருவில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

என்னென்ன வசதிகள்?

முதல் தளம் கல்வி மையமாக செயல்படுகிறது. இங்கு ஒரே நேரத்தில் 51 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் உள்ளன. இதற்கு இரண்டரை மணி நேரத்துக்கு ரூ.5 கட்டணம். இங்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் கிடைக்கும். மாணவர்களிடம் லேப்டாப் இருந்தால், அதையும் இங்கு கொண்டு வந்து பயன்படுத்தலாம். இணையத்தில் தகவல் தேட வசதியாக 3 கணினிகளும் நிறுவப்பட்டுள்ளன. 2 ஆம் தளம் தேநீர், உணவு அருந்தும் கூடமாகும். இங்கேயே உணவு சமைத்து விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செயல்படும் நேரம்

மேற்கண்ட சேவைகளை பயன்படுத்த விரும்புவோர் https://gccservices.chennaicorporation.gov.in/muthalvarpadaippagam என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். 100 சதவீதம் இணையவழி பதிவு மட்டுமே ஏற்கப்படும். கொளத்தூர் தொகுதியை சேர்ந்த புத்தொழில் நிறுவனத்தினர், மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடிமட்டத்தில் இருந்து முன்னேறி வரும் புத்தொழில் நிறுவனத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெரிய நிறுவனத்தினர் பணியாற்ற அனுமதி இல்லை. இந்த மையம் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்று மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வரின் வேண்டுகோள்

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில்,” பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், WiFi உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம்.

அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாக படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம்.

இதுபோன்ற மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன். இத்தகைய வாய்ப்புகளைச் சீரிய முறையில் இளைஞர்களும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rent a sailing boat and become your captain. hest blå tunge. The real housewives of beverly hills 14 reunion preview.