பட்ஜெட் இலச்சினையில் ‘ரூ’ ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

மிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட பட்ஜெட் logo-வில் ‘ரூ’ எழுத்து இடம்பெற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பட்ஜெட் தொடர்பான விமர்சனங்களுக்கும் பதிலளித்துள்ளார்.

‘உங்களில் ஒருவன்!’ என்ற தலைப்பில் காணொலி வாயிலாக அவ்வப்போது கேள்வி – பதில் காணொலியை வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தற்போது தமிழக பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து காணொலியை வெளியிட்டுள்ளார். அவை இங்கே…

பட்ஜெட்டுக்கு முன்னாடி நீங்கள் போட்ட ட்வீட்டே நேசனல் நியூஸ் ஆகிவிட்டதே?

அது ஒன்றுமில்லை. பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக்கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை அதில் ‘ரூ’-என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள். அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள்.

ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பேரிடர் நிதி வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்களை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்கிறார்.

அவங்களே, பல பதிவுகளில் ரூ-என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் Rupees- என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாக தெரியாதவங்களுக்கு, இதுதான் பிரச்னையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்!

உங்களை பொறுத்தவரை பட்ஜெட் எப்படி வந்திருக்கு?

நான் என்ன சொல்கிறேன் என்பதைவிட, இந்தியா முழுக்க வெளிவருகிற நாளிதழ்கள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை பாருங்கள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில், தலைப்பிட்டு கார்ட்டூனில் ஒரு கோலத்தில், எல்லா திட்டங்களும் கொண்டு வந்து சேர்த்ததை வெளிபடுத்தியிருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா-ல், “எதிர்க்கட்சிகளின் அரசியல் குற்றச்சாட்டுகளை ‘செக்மேட்’ செய்திருக்கிறது இந்த பட்ஜெட்”-என்று எழுதி இருக்கிறார்கள்.தி இந்து நாளிதழ்-ல், “மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியத் துறைகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த பட்ஜெட்”-என்று எழுதியிருக்கிறார்கள்.“கல்வி, சமூகநலத் திட்டங்களுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்” என்று டெக்கான் கிரானிக்கள் நாளிதழில் எழுதி இருக்கிறார்கள்.“மக்கள் நலத்திட்டங்களுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பட்ஜெட்”- என்று தி பிசினஸ் லைன் பாராட்டி இருக்கிறார்கள்.

பெண்கள் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் நலத்திட்டங்களையும் மையப்படுத்தி இருக்கிறதாக, தி எக்கனாமிக் டைம்ஸ்-ல் எழுதி இருக்கிறார்கள்.’இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது’-என்று கூசாமல் கேட்கிறவர்கள், பத்திரிகையாவது படிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளுடைய விமர்சனங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால், அதை நாம் பரிசீலிக்கலாம். ஆனால், ஏதாவது குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே, சிலர் சொல்வது அரசு மேல் இருக்கிற வன்மம் மட்டும்தான் என்பது தெரிகிறது. உருப்படியான எதுவும் அதில் இல்லை.

நாம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை ஆதாரப்பூர்வமாக சொல்ல விரும்புறேன்.

2011-ல் இருந்து 2016 வரை, நம்முடைய கடன் வளர்ச்சி என்பது 108 விழுக்காடு. இதுவே, 2016-ல் இருந்து 2021-ல் 128 விழுக்காடாக அதிகரித்தது. ஆனால், நம் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து இப்போதுவரை 93 விழுக்காடாக இதை குறைத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டுடைய கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவுபடுத்தியிருக்கிறது. கடன் வாங்காத அரசு என்று எதுவும் இல்லை. அப்படி வாங்குகின்ற கடனை முறையாக செலவு செய்கிறோமா என்பதுதான் முக்கியம்.

அந்த வகையில், எதிர்கால தலைமுறைக்கான முதலீடாகதான் திராவிட மாடல் அரசு கடன் தொகையை செலவு செய்திருக்கிறது. அதனால்தான், எதிர்க்கட்சிகளுடைய பொருளற்ற விமர்சனத்தை வல்லுநர்களும், நாளேடுகளின் தலையங்கங்களுமே “தவறு”-என்று ஆணித்தரமா சொல்லிவிட்டார்கள்.

அடுத்து என்ன சார்?

இப்போது அறிவித்ததை எல்லாம் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சர்களை, அதிகாரிகளை முடுக்கி விடுவதுதான் உடனடியான, என்னுடைய அடுத்த வேலை.2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாடு அனைத்திலும் நம்பர் 1-ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும் என்ற நிறைய பணிகள் இருக்கிறது. அதனால் ஓய்வே கிடையாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 sky immo. Di sisi lain, prancis merupakan juara piala dunia 2018 setelah mengalahkan kroasia 4 2 di final piala dunia 2018. 239 京都はんなり娘 大炎上編 画像11.