மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதைத் திட்டம்: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி!

டந்த வாரம் ரயில்வே அமைச்சர் அஸ்வி வைஷ்ணவ் பெரம்பூர் ஐசிஎஃப் ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாக மாநில அரசு இந்த திட்டத்தை வேண்டாம் என்று கூறியதால் இத்திட்டம் கைவிடப்படுகிறது எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் அறிவிப்பு வெளியானது. ஆனால், ரயில்வே அமைச்சர் அஸ்வி வைஷ்ணவ் கூறியதாக வந்த செய்தி படி தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிடக்கோரவில்லை என மறுப்பு வெளியானது.

இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மதுரை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தெற்கு ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், இத்திட்டத்தினை கைவிடுவது குறித்து எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படாத நிலையில், இத்ததிட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கையும் விடுத்திருப்பதாக தமிழக அமைச்சர் சிவசங்கர் நேற்று தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் அமைச்சர் மறுப்பு

இதனிடையே அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லை என ரயில்வே அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவுபடுத்தியுள்ளார்.

குழப்பம் ஏன்..? தெற்கு ரயில்வே விளக்கம்

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே, ” 10.01.2025 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்து கேட்ட போது, அங்கு நிலவிய இரைச்சலான சூழ்நிலையினாலும், தேசிய மற்றும் மாநில ஊடகங்களைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே பிரச்சினைகள் குறித்து பல கேள்விகளைக் கேட்டனர்.

அப்போது, ரயில்வே அமைச்சர் தனுஷ்கோடி பாதைத் திட்டம், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளால் கைவிடப்பட்டது குறித்து அளித்த பதிலை, மதுரை-தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்திற்கான பதில் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» bilim teknoloji Çalışma grubu. Tägliche yacht und boot. hest blå tunge.