“கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம்” – மாணவர்களுக்கான நன்மைகள் என்ன?

கும்பகோணத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் வியாழன்று வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நம்முடைய உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை , ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன் , டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ரா.ஈஸ்வரன்,தி.வேல்முருகன், பின்னர் அவர்களைத் தொடர்ந்து நம்முடைய அவை முன்னவர், அதேபோல், பேரவைத் தலைவர் அவர்கள் ஆகியோர் விதி எண் 55-ஐப் பயன்படுத்தி தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துக்களை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கியமான தலைவர்களில் ஒருவராக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டிருக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு – எல்லோரும் இங்கே குறிப்பிட்டிருப்பதைப்போல, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு – விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்திலே, நம்முடைய உறுப்பினர் ஜி.கே. மணி குறிப்பிட்டதைப்போன்று, எந்தவிதத் தயக்கமுமின்றி நான் அறிவிக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களது பெயரில் கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை சொல்கிறேன்” என தெரிவித்தார்.

மாணவர்களுக்கான நன்மைகள்

கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைவதால், உள்ளூர் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை எளிதாகப் பெற முடியும். தற்போது, உயர்கல்விக்காக சென்னை, கோயம்புத்தூர் போன்ற தொலைதூர நகரங்களுக்குச் செல்லும் மாணவர்களின் பயணச் செலவு மற்றும் தங்குமிடச் சிக்கல்கள் குறையும். இந்தப் பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்பம், கலை, அறிவியல் மற்றும் மனிதவியல் போன்ற பலதரப்பட்ட பாடப்பிரிவுகளை வழங்கினால், அது மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை உறுதி செய்யும். மேலும், புலமைப்பரிசில், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்களின் திறன்கள் மேம்படும்.

உள்ளூர் மக்களுக்கான பயன்கள்

பல்கலைக்கழகம் அமைவதால் கும்பகோணத்தின் பொருளாதாரம் செழிக்கும். கட்டுமானப் பணிகள், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு, மாணவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவை உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கும். மேலும், பல்கலைக்கழகத்தால் ஈர்க்கப்படும் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் கும்பகோணத்தின் கலாசார மற்றும் சமூகத் தொடர்புகளை வளப்படுத்துவர். இது, உள்ளூர் மக்களுக்கு புதிய வருவாய் ஆதாரங்களையும், சர்வதேச அளவிலான வெளிப்பாட்டையும் தரும்.

கல்வித் துறையில் கருணாநிதியின் பங்களிப்பு

முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதி, தனது ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு அளித்தவர். அவர் அறிமுகப்படுத்திய இலவச பாடநூல்கள் திட்டம், பெண்கள் கல்விக்கான ஊக்குவிப்பு, உயர் கல்வித் துறையை ஊக்குவிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தமிழ்நாட்டை கல்வியில் முன்னோடியாக மாநிலமாக உருவாக்கியதில் முக்கிய பங்காற்றின என்றால், அது மிகையில்லை. அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைவது, அவரது சமூக நீதி மற்றும் கல்வி மேம்பாட்டு பணிகளுக்கு நிரந்தர அஞ்சலியாக அமையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Berangkatkan 41 kontingen, pwnu provinsi kepri siap sukseskan kegiatan porseni 1 abad nu solo. xcel energy center getting new name for 2025 26 wild season. ?者?.