Amazing Tamilnadu – Tamil News Updates

கலைஞர் மகளிர் உரிமை தொகை: தகுதி இல்லாதவர்களுக்கான விதிவிலக்குகள் அறிவிப்பு!

விவசாயம் மற்றும் வீட்டு வேலை போன்ற குறைந்த கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை மற்றும் எளிய குடும்பங்களைக் சேர்ந்த பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரத்தை வழங்குவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்தார்.

இந்தத் திட்டம் சுமார் 115 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதத்திற்கு ரூ.1000/-வழங்குகிறது. தங்கள் குடும்பங்களுக்காக வாழ்நாள் முழுவதும் அயராது உழைக்கும் பெண்களின் கடின உழைப்பை அங்கீகரிக்க இத் திட்டம் ஒரு முக்கியமான முயற்சியாகும். இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், மேலும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இத்திட்டத்தில் பயன் பெற தகுதி இல்லாதவர்கள் யார் என்பது குறித்தும், அதே சமயம் அதில் அளிக்கப்பட்டுள்ள விதிவிலக்குகள் குறித்த விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

பயன் பெற தகுதி இல்லாதவர்கள் யார்?

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்க குறிப்பில் இது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை இங்கே…

லைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி இல்லாதவர் ஆவர்.

ரூ.25 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
ண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.

மாநில, மத்திய அரசு ஊழியர்கள் /பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள். உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள். மற்றும் அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்.

ராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் உறுப்பினர்கள். தலைவர்கள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு சீருந்து, ஈப்பு, டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
ண்டுக்கு ரூ.50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.

விதிவிலக்குகள் என்னென்ன?

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன். முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசை சிதைவு நோய் மாற்றுத்திறன். தொழுநோய் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை.

வ்வகைப்பாட்டினர் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வரவில்லை எனில் தகுதியானவர்கள். வகைப்பாட்டிலும் விண்ணப்பிக்கலாம்.

ந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர. அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version