மதுரை ஜல்லிக்கட்டு: களமிறங்கும் 12, 632 காளைகள்… காத்திருக்கும் காளையர்கள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

அவனியாபுரத்தில் வரும் பொங்கல் தினமான ஜனவரி 14 ஆம் தேதியும், பாலமேட்டில் 15 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அலங்காநல்லூரில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த 3 போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளை போட்டியில் கலந்துகொள்ளச் செய்வோர் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் கடந்த 6 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

களமிறங்கும் 5,347 காளையர்கள்

அதன்படி ஆன்லைன் மூலமான முன்பதிவுகள் நடைபெற்ற நிலையில், மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5,347 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1,914 வீரர்களும், அவனியாபுரம் போட்டியில் 1,735 வீரர்களும், அலங்காநல்லுாரில் 1, 698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.

12, 632 காளைகள்

அதேபோன்று மூன்று இடங்களிலும் பங்கேற்பதற்காக 12, 632 காளைகளை அதன் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், அலங்காநல்லூர் போட்டியில் பங்கேற்க 5,786 காளை உரிமையாளர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4, 820 காளை உரிமையாளர்களும், அவனியாபுரம் போட்டியில் பங்கேற்க 2,026 காளை உரிமையாளர்களும் பதிவு செய்துள்ளனர்.

மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே காளைகள் பங்கேற்க முடியும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டை தடுக்க கியூ.ஆர்.கோடுடன் கூடிய டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» sağlıklı dişler için bunlardan uzak durun !. Noleggio yacht con equipaggio. hest blå tunge.