எகிறிய தங்கம் விலை… இறங்க வாய்ப்பு உண்டா?

பரண தேவைகளுக்குப் போக முதலீட்டு அடிப்படையில் தங்க நகைகள் வாங்கும் போக்கும் மக்களிடையே இன்று அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம் பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பும்போது தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்றம் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தங்கத்தின் விலை சென்னையில் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஜனவரி 16 ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை கிராம், 7,390 ரூபாய்க்கும், சவரன், 59,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 வரை உயர்ந்து, சவரன் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரத்தை தொட்டது. அதாவது கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.7450-க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.59,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையில் இலேசான இறக்கம் காணப்பட்டது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.59,480க்கு விற்பனை ஆகி வருகிறது.

விலை உயர்வு ஏன்?

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலை குறித்து பேசும் தங்க நகை வியாபாரிகள், “சர்வதேச சந்தையில் ஏற்பட்டிருக்க கூடிய தங்கத்தின் தேவை மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி அதே போல் மற்ற துறையில் இருந்து முதலீடு செய்பவர்களுடைய பார்வை தங்கத்தில் முதலீடு செய்வதற்காக திரும்பி உள்ளது. எனவே, தங்கத்தின் விலை தற்போது கூடி வருகிறது.

‘ஒரு கிராம் 8,000 ரூபாயைத் தொடும்’

தற்போது வரை கூடிக் கொண்டே செல்லும் தங்கத்தின் விலை, மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் ஒரு கிராம் 8,000 ரூபாயைத் தொடும்” என்கிறார்கள்.

மற்ற துறையில் முதலீடு செய்வதால் வீழ்ச்சி ஏற்படும் என கருதி முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வதால் நல்ல லாபமும் பாதுகாப்பும் இருக்கும் என கருதி உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

பங்கு சந்தையில் வளர்ச்சியில்லை என்பதால் சந்தையில் மற்ற துறைகளின் முதலீடு செய்பவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருவதால் வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயரக் கூடும் என்பதே முதலீட்டு ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» kış saatine neden alışamıyoruz ?. Private yacht charter. Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :.