‘தி கோட்’ : தொடர்ந்து வசூலில் கலக்கும் விஜய்யின் ஆக்‌ஷன் த்ரில்லர்!

யக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம், கடந்த 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘தி கோட்’ படம் வெளியான அன்று படம் குறித்த சில மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும், விஜய் ரசிகர்களுக்கு படம் கொண்டாட்டமாகவே அமைந்தது. அதே சமயம் விறுவிறுப்பாக, பல்வேறு ட்விஸ்ட்டுகளுடன் செல்வதாக வழக்கமான சினிமா ரசிகர்களும் ‘தி கோட்’ படத்துக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வந்தனர்.

இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனால், வழக்கமான சினிமா ரசிகர்கள் வருகை அதிகரித்ததால், தியேட்டர்களில் டிக்கட் புக்கிங் தொடர்ந்து ஃபுல் ஆகவே காணப்படுகிறது. அதிலும், வாரத்தின் இடைப்பட்ட நாட்களில் கூட புக்கிங் ஃபுல் ஆகவே இருப்பதாக ஆன்லைன் பதிவுகள் காட்டுகின்றன.

இந்த நிலையில், ‘தி கோட்’ திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.315 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்தது.

தமிழ்நாட்டில் மாறுபட்ட விமர்சனங்களால் படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் வசூலில் இலேசான சரிவு ஏற்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சக்கை போடு போடத் தொடங்கி விட்டது. முதல் நாளில் ரூ.44 கோடியும், 2-ம் நாளில் ரூ.25.5 கோடியும், 3-வது நாளில் ரூ.33.5 கோடியும், 4-வது நாளில் ரூ.34 கோடியும், 5-வது நாளில் ரூ.14.75 கோடியும், 6 ஆவது நாளில் சுமார் ரூ.10.50-ஐயும் வசூலித்துள்ளது. 6 ஆம் நாள் வரை மொத்தமாக ரூ.162.25 கோடியை வசூலித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இயக்குநரான அர்ச்சனா கல்பாத்தி, கடந்த 9 ஆம் தேதி தனது X சமூக வலைதளத்தில், ‘தி கோட்’ திரைப்படம் நான்கே நாளில் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

வட இந்தியாவிலும் வரவேற்பு

மேலும் வட இந்தியாவிலும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டு, அதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

மலேசியாவிலும் வசூலில் டாப்

அதேபோன்று வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. மலேசியாவில் இப்படம் திரையிடப்பட்ட செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை தொடர்ந்து வசூலில் முதலிடத்தில் இருப்பதாக அதன் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், ‘தி கோட்’ இயக்குநர் வெங்கட் பிரபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கில்லி’ பட இயக்குனர் தரணி, விஜய் மற்றும் திரிஷா கிருஷ்ணன் ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Spanish startup association says microsoft has a massive cloud market monopoly, that violates eu antitrust laws. 台中健身房推薦 冥想、瑜珈 | [your brand]. Deportivo cali empató frente al américa y sigue por fuera del.