ஃபோர்டு கார் தொழிற்சாலையில் மார்ச் முதல் உற்பத்தி?பேச்சுவார்த்தை தீவிரம்!

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு நிறுவனம், தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உற்பத்தி ஆலைகளைத் தொடங்கி செயல்பட்டு வந்தது. இதன் மூலம் எராளமானோர் வேலைவாய்ப்புகளைப் பெற்று பயனடைந்து வந்தனர்.

இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட கார்களை சுமார் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது அந்த நிறுவனம். ஆனால், உற்பத்தியில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஆலைகளையும் ஃபோர்டு நிறுவனம் மூடியது.

குஜராத்தில் செயல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை, டாடா நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் செயல்பட்டு வந்த அந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் க்ஷ்பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார்.

அந்த வகையில், தமிழகத்தில் மூடப்பட்ட ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் வகையில் அந்நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரது தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக, அக்கோரிக்கையை ஃபோர்டு நிறுவனமும் ஏற்று, ஒப்புதல் கடிதம் வழங்கியது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்ததும், ஆலையை இயக்கும் பணிகளை துவக்க முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது சம்மதம் தெரிவித்து மூன்று மாதங்களான நிலையில், மறைமலை நகரில் மூடப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் இயக்குவது குறித்து, ஃபோர்டு நிறுவனத்துடன் அதிகாரிகள் தற்போது பேச்சு நடத்தி வருவதாகவும், வரும் மார்ச் மாதத்துக்குள் கார் உற்பத்தி ஆலையை மீண்டும் செயல்பட முயற்சி எடுக்கப்படும் என தமிழக அரசின் தொழில்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஃபோர்டு கார் உற்பத்தி ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Zamfara govt urges vigilance on anthrax outbreaks. Click here for more news about ap minister savitha. Bahas 2 agenda penting, pjs wali kota batam hadiri rapat paripurna dprd kota batam.