இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்… 4ஆவது இடத்தில் ஷிவ் நாடார்!

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ். இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல வணிக பத்திரிகை நிறுவனமான ‘ஃபோர்ப்ஸ்’ ஆண்டுதோறும் உலகின் முதல்நிலை கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலை அப்பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் சுமார் 200 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். இவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 12 ஆவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 118 பில்லியன் டாலர் ஆகும். இந்திய பட்டியலில் கவுதம் அதானி (அதானி குரூப்) 81.2 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்திலும் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர் (ஜே.எஸ்.டபுள்யூ குரூப்) 39.9 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஷிவ் நாடார்

ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் நான்காவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 38.4 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.3.21 லட்சம் கோடி) ஆகும்.

அவரைத் தொடர்ந்து இயக்குனர் திலிப் சங்வி (சன் பார்மா), சைரஸ் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட்), குமார் பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), ராதாகிருஷ்ணன் தமானி (அவன்யூ சூப்பர்மார்க்கெட்டுகள், குஷால் பால் சிங் (டி.எ.எப். லிமிடெட்), ரவி ஜெய்புரா (வருண் பெவரேஜஸ்) ஆகியோர் டாப்-10 பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Meine daten in der google suche. Cbn launches fx code, to settle backlogs soon cardoso news media. Lizzo extends first look deal with prime video tv grapevine.