தீபாவளி: குறைந்த விலையில் கிடைக்கும் ‘அதிரசம்-முறுக்கு காம்போ’ தொகுப்பு!

மிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில், மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை நேற்று முதல் தொடங்கி உள்ளது.

வெளிச் சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே இப்பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு, பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவற்றில் என்னென்ன பொருட்கள், என்னென்ன விலையில் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த விவரம் இங்கே…

பிரீமியம் (Premium) தொகுப்பு

துவரம் பருப்பு – 200 கிராம், உளுத்தம் பருப்பு – 200 கிராம், கடலை பருப்பு – 200 கிராம், வறுகடலை (குண்டு) -100 கிராம், மிளகு – 25 கிராம், சீரகம் – 25 கிராம், வெந்தயம் – 50 கிராம், கடுகு – 50 கிராம், சோம்பு – 50 கிராம், நீட்டு மிளகாய் -100 கிராம், தனியா – 100 கிராம், புளி -100 கிராம், ரவை – 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.199/- என்ற விலையில் விற்கப்படுகிறது.

எலைட் (Elite) – தொகுப்பு

துவரம் பருப்பு – 250 கிராம், உளுத்தம் பருப்பு – 250 கிராம், கடலை பருப்பு – 250 கிராம், வறுகடலை (குண்டு) -200 கிராம், மிளகு – 50 கிராம், சீரகம் – 50 கிராம், வெந்தயம் – 50 கிராம், கடுகு – 50 கிராம், சோம்பு – 50 கிராம், நீட்டு மிளகாய் – 250 கிராம், தனியா – 200 கிராம், புளி – 100 கிராம், ரவை – 100 கிராம், ஏலக்காய் – 5 கிராம் என 14 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.299/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

‘அதிரசம்-முறுக்கு காம்போ’ தொகுப்பு

அது மட்டுமல்லாது, தீபாவளி பண்டிகையில் எவ்வாறு பட்டாசுகள் தனி இடத்தைப் பிடிக்கின்றதோ அதேபோல இனிப்புகளும் முதலிடம் பெறுகின்றன. பொதுவாக தீபாவளியன்று இனிப்புகள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது வழக்கம். அதற்கேற்றார் போல தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையில் “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ‘அதிரசம்-முறுக்கு காம்போ’ தொகுப்பில் பச்சரிசி மாவு – 500 கிராம், பாகு வெல்லம் – 500 கிராம், ஏலக்காய் – 5 கிராம், மைதா மாவு – 500 கிராம், Sunland/Goldwinner Sunflower Oil -1/2 லிட்டர் என 5 வகையான பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.190/- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தொகுப்புகள் அனைத்து வெளிச் சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக தீபாவளி பண்டியைகை கொண்டாடி மகிழ வேண்டும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

台中健身房推薦 world gym費用、健身工廠費用 | [your brand]. Alex rodriguez, jennifer lopez confirm split. 지속 가능한 온라인 강의 운영.